முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » தலையில் 3 முறைக்கு மேல் அடிபட்டாலே மறதி நோய் ஏற்படுமாம்.. ஆய்வு தரும் எச்சரிக்கை தகவல்!

தலையில் 3 முறைக்கு மேல் அடிபட்டாலே மறதி நோய் ஏற்படுமாம்.. ஆய்வு தரும் எச்சரிக்கை தகவல்!

வாழ்க்கையில் நீங்கள் உங்களது தலையில் எத்தனை முறை அடிபடுகிறதோ? அவ்வளவு மோசமாக உங்களின் மூளையின் செயல்பாடு இருக்கும் என்கிறார் ஆய்வில் ஈடுபட்ட டாக்டர் வனேசா ரேமண்ட்.

 • 16

  தலையில் 3 முறைக்கு மேல் அடிபட்டாலே மறதி நோய் ஏற்படுமாம்.. ஆய்வு தரும் எச்சரிக்கை தகவல்!

  நம்மில் பலருக்கு ஞாபக மறதி ஏற்படுவது என்பது இயல்பான ஒன்றாக இருந்தாலும் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் நம்மை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். இந்த சூழலில் இதுவே ஒரு நோயாக இருந்தால் யோசித்துக்கூட பார்க்கமுடியவில்லை. ஆம் மூளையின் செயல்திறனைப் படிப்படியாக செயலிழக்க செய்து நினைவாற்றல் இழப்பு, சிந்திக்கும் திறன் குறைவு போன்ற பல பிரச்சனைகள் டிமென்ஷியா எனப்படும் மறதி நோயால் ஏற்படுகிறது. குறிப்பாக வயதானவர்களை அதிகம் பாதிக்கும் இந்நோயால் சில நேரங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படும் அபாயம் உள்ளது.

  MORE
  GALLERIES

 • 26

  தலையில் 3 முறைக்கு மேல் அடிபட்டாலே மறதி நோய் ஏற்படுமாம்.. ஆய்வு தரும் எச்சரிக்கை தகவல்!

  இதனால் தான் வயதானவர்களைத் தனியாக விடக்கூடாது என்றும் வீட்டில் உள்ள அனைவரைப் பற்றியும் அடிக்கடி பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இல்லாவிடில் நினைவாற்றலை இழக்கும் நிலை ஏற்படுவதோடு அவர்களுக்கான வேலையைக்கூட செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இந்த நிலை இன்றைக்கு பெரும்பாலான முதியவர்களுக்கு ஏற்படுகிறது என்கிறது ஆய்வுகள். இந்த சூழலில் தான், நம்மை அறியாமலோ அல்லது விபத்து மூலமாகவோ தலையில் 3 முறைக்கு மேல் அடிபட்டாலே டிமென்ஷியா பாதிப்பு ஏற்படுகிறது என்கின்றது புதிய ஆய்வுகள்..

  MORE
  GALLERIES

 • 36

  தலையில் 3 முறைக்கு மேல் அடிபட்டாலே மறதி நோய் ஏற்படுமாம்.. ஆய்வு தரும் எச்சரிக்கை தகவல்!

  டிமென்ஷியா குறித்த ஆய்வுகள்.. வாழ்நாளில் உங்களுக்கு 3 முறை தலையில் அடிபட்டாலே டிமென்ஷியா எனப்படும் மறதி நோயின் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறது புதிய ஆய்வுகள். இதுக்குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வல்லுநர்கள் ஆய்வு செய்தனர். இதில் தலையில் அடிபடுவது, விளையாடும் போது அடிபடுதல் மற்றும் கார் விபத்து போன்றவற்றில் தலையில் ஏற்படும் பாதிப்பு போன்றவற்றினால் ஏற்படும் மூளையதிர்ச்சி உங்களின் பிற்கால வாழ்க்கையைப் பாதிக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

  MORE
  GALLERIES

 • 46

  தலையில் 3 முறைக்கு மேல் அடிபட்டாலே மறதி நோய் ஏற்படுமாம்.. ஆய்வு தரும் எச்சரிக்கை தகவல்!

  மேலும் வாழ்க்கையில் நீங்கள் உங்களது தலையில் எத்தனை முறை அடிபடுகிறதோ? அவ்வளவு மோசமாக உங்களின் மூளையின் செயல்பாடு இருக்கும் என்கிறார் ஆய்வில் ஈடுபட்ட டாக்டர் வனேசா ரேமண்ட். இதோடு தலையில் ஏற்படும் காயங்களும் டிமென்ஷியாவிற்கு முக்கிய ஆபத்துக் காரணிகளாக இருக்கும் எனவும் பல சிறிய தாக்கங்கள் கூட பிற்கால வாழ்க்கையில் மூளை பாதிப்பு மற்றும் டிமென்ஷியா ஆபத்தை தூண்டும் என்று சான்றுகள் காட்டுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 56

  தலையில் 3 முறைக்கு மேல் அடிபட்டாலே மறதி நோய் ஏற்படுமாம்.. ஆய்வு தரும் எச்சரிக்கை தகவல்!

  ஆய்வு எத்தனை பேர் கலந்துக் கொண்டனர்? ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், 50 முதல் 90 வயதுக்கு உட்பட்ட சுமார் 15 ஆயிரம் பேர் கலந்துக் கொண்டனர். இவர்களிடம் உங்களுக்கு எத்தனை முறை தலையில் அடிபட்டுள்ளது? என்றெல்லாம் பல கேள்விகள் எழுப்பப்பட்டது. இவற்றில் அதிக முறை தலையில் அடிபட்டவர்களுக்கு டிமென்ஷியா மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதோடு நீண்டகால சேதத்திற்கு ஆளாகக்கூடிய சிக்கலான பணிகளை கவனித்தல் மற்றும் முடித்தல் போன்ற முக்கிய செயல்பாடுகளில் மறுவாழ்வு கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறது. மேலும் காயத்திற்குப் பிறகு முதல் வருடத்தில் டிமென்ஷியா நோயறிதலுக்கான ஆபத்து அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 66

  தலையில் 3 முறைக்கு மேல் அடிபட்டாலே மறதி நோய் ஏற்படுமாம்.. ஆய்வு தரும் எச்சரிக்கை தகவல்!

  பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? தலையில் அடிபட்டு மூளையதிர்ச்சி ஏற்பட்டவுடன் உடனடியாக நீங்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டும். குறிப்பாக வாந்தி, நினைவாற்றல் இழப்பு, மனநிலை மாற்றங்கள் அல்லது தடுக்க முடியாத தலைவலி போன்ற அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தாலோ அல்லது தலையில் காயம் ஏற்பட்டாலோ கடினமான வேலைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

  MORE
  GALLERIES