முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » பெண்ணுறுப்பை சுத்தம் செய்ய சோப்பு பயன்படுத்தவே கூடாது : ஏன் தெரியுமா..?

பெண்ணுறுப்பை சுத்தம் செய்ய சோப்பு பயன்படுத்தவே கூடாது : ஏன் தெரியுமா..?

பெண்ணுறுப்பின் உட்புற பகுதியை சுத்தம் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை காட்டிலும் தீமைகள் தான் அதிகம்.

  • 16

    பெண்ணுறுப்பை சுத்தம் செய்ய சோப்பு பயன்படுத்தவே கூடாது : ஏன் தெரியுமா..?

    தனி சுகாதாரம் மிக முக்கியமானது தான். அதிலும் பெண்களை பொருத்தவரையில் கூடுதல் பொறுப்பும், கவனமும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், சுகாதாரமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெண்ணுறுப்பின் உட்புற பகுதியில் சோப்பு அல்லது இதர திரவங்களை கொண்டு சுத்தம் செய்யும் நடவடிக்கை பாதுகாப்பானதா? நிச்சயமாக இது சுகாதாரமான நடவடிக்கையாக தோன்றினாலும், இது உங்கள் பெண்ணுறுப்பை பாதிக்கக் கூடும்.

    MORE
    GALLERIES

  • 26

    பெண்ணுறுப்பை சுத்தம் செய்ய சோப்பு பயன்படுத்தவே கூடாது : ஏன் தெரியுமா..?

    சுத்தம் செய்வது ஏன்  : பெண்ணுறுப்பு பகுதியில் ஏதேனும் தொற்றுகள் அல்லது கிருமிகள் வளருவதை தடுக்க அப்பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது இயல்பானதுதான். குறிப்பாக மாதவிலக்கு அல்லது பாலியல் உறவுக்கு பிறகான நேரத்தில் உடனுக்குடன் இப்பகுதியை சுத்தம் செய்துவிட வேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனர். அதிலும், பெண்ணுறுப்பில் இருந்து வரும் வாசனையை போக்கிவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். சிலருக்கு அரிப்பு அல்லது பெண்ணுறுப்பு கசிவு போன்ற தொந்தரவுகள் ஏற்படுவதால் அதில் இருந்து விடுபடும் நோக்கில் பெண்ணுறுப்பை சுத்தம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 36

    பெண்ணுறுப்பை சுத்தம் செய்ய சோப்பு பயன்படுத்தவே கூடாது : ஏன் தெரியுமா..?

    ஏன் இதை செய்யக் கூடாது  :  பெண்ணுறுப்பின் உட்புற பகுதியை சுத்தம் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை காட்டிலும் தீமைகள் தான் அதிகம். ஏனென்றால் பெண்ணுறுப்பில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ஏராளம் இருக்கும். நீங்கள் சுத்தம் செய்யும்போது அவை கொல்லப்பட்டு விடும். இதனால், பெண்ணுறுப்பின் பிஹெச் அளவு மாறுபடுவதோடு, அங்கு எரிச்சல் உணர்வு ஏற்படலாம்.

    MORE
    GALLERIES

  • 46

    பெண்ணுறுப்பை சுத்தம் செய்ய சோப்பு பயன்படுத்தவே கூடாது : ஏன் தெரியுமா..?

    தொற்று மற்றும் பிரச்சினைகள்  : பெண்ணுறுப்பை சுத்தம் செய்வதால், அங்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அழியும் நிலையில் கிருமிகள் வளரும். அது கர்ப்பப்பை வரையிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். பெண்ணுறுப்பு வறட்சியை ஏற்படுத்தும். சில சமயம் பெண்ணுறுப்பில் எரிச்சல், அழற்சி, அரிப்பு மற்றும் வலி போன்றவை உண்டாகலாம்.

    MORE
    GALLERIES

  • 56

    பெண்ணுறுப்பை சுத்தம் செய்ய சோப்பு பயன்படுத்தவே கூடாது : ஏன் தெரியுமா..?

    தன்னைத் தானே சுத்தம் செய்யும் : பெண்ணுறுப்புஇயற்கையாகவே பாதுகாப்பு அரண்களை கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். குறிப்பாக, பெண்ணுறுப்பின் உள்ளே வாழும் பாக்டீரியாக்கள், கிருமிகளை அழித்து அப்பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ளும். வெளியில் இருந்து தண்ணீர் அல்லது இதர திரவங்களை கொண்டு சுத்தம் செய்யத் தேவையில்லை.

    MORE
    GALLERIES

  • 66

    பெண்ணுறுப்பை சுத்தம் செய்ய சோப்பு பயன்படுத்தவே கூடாது : ஏன் தெரியுமா..?

    எப்படி சுத்தம் செய்யலாம்  : என்ன இருந்தாலும் பெண்ணுறுப்பு சுத்தமாக இல்லையே என்ற மனக்குறையும், அசௌகரியமான உணர்வும் உங்களுக்கு ஏற்படக் கூடும். அத்தகைய சமயத்தில் பெண்ணுறுப்பின் வெளிப்புற பகுதியை இலகுவான சோப் மற்றும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யலாம். அதே சமயம், மனமூட்டும் பொருள் எதையும் இங்கு பயன்படுத்தக் கூடாது.பெண்ணுறுப்பில் இயல்பாக வெளியேறக் கூடிய வியர்வை, அழுக்கு மற்றும் கெட்ட பாக்டீரியா போன்றவற்றை மட்டும் சுத்தம் செய்தால் போதுமானது. பெண்ணுறுப்பை சுத்தம் செய்யும் சமயத்தில் ஆசனவாய் பகுதியையும் சுத்தம் செய்ய வேண்டும். ஏனென்றால் கிருமிகள் அங்கிருந்தும் கூட இங்கு பரவக் கூடும் என்பதை மறக்காதீர்கள்.

    MORE
    GALLERIES