முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சளி இருக்கும்போது இந்த 4 விஷயங்களை மட்டும் பண்ணாதீங்க.. நிலமையை இன்னும் மோசமாக்கும்.!

சளி இருக்கும்போது இந்த 4 விஷயங்களை மட்டும் பண்ணாதீங்க.. நிலமையை இன்னும் மோசமாக்கும்.!

பெருந்தொற்று கட்டுப்பாடுகள் பெரிய அளவில் இல்லாததால் இன்ஃப்ளூயன்ஸா நோய் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

 • 19

  சளி இருக்கும்போது இந்த 4 விஷயங்களை மட்டும் பண்ணாதீங்க.. நிலமையை இன்னும் மோசமாக்கும்.!

  குளிர்காலம் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்று வரும் நிலையில் பெருந்தொற்று கட்டுப்பாடுகள் பெரிய அளவில் இல்லாததால் இன்ஃப்ளூயன்ஸா நோய் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 29

  சளி இருக்கும்போது இந்த 4 விஷயங்களை மட்டும் பண்ணாதீங்க.. நிலமையை இன்னும் மோசமாக்கும்.!

  இதனை உறுதிப்படுத்தும் விதமாக டெல்லியில் காய்ச்சல் பாதிப்பு 5 மடங்கு அதிகரித்துள்ளது. ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாமல் தற்காத்து கொள்ள அல்லது நிலைமை மோசமாகாமல் தவிர்க்க , பாதுகாப்பு ஏன் முக்கியம் என்பதையும், என்னென்ன செய்ய வேண்டும் மற்றும் செய்ய கூடாது என்பதையும் ஒருவர் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 39

  சளி இருக்கும்போது இந்த 4 விஷயங்களை மட்டும் பண்ணாதீங்க.. நிலமையை இன்னும் மோசமாக்கும்.!

  தடுப்பூசிகள் மற்றும் பிற தடுப்பு நடவடிக்கைகள் ஃப்ளூவிலிருந்து அதிக மக்களை பாதுகாக்க உதவும். காய்ச்சல், சளி, ஜலதோஷம், இருமல், மூக்கு ஒழுகுதல்/மூக்கடைப்பு, உடல்வலி போன்ற ஃப்ளூ அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் பாதிப்பை சிறப்பாக நிர்வகிக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் இங்கே:

  MORE
  GALLERIES

 • 49

  சளி இருக்கும்போது இந்த 4 விஷயங்களை மட்டும் பண்ணாதீங்க.. நிலமையை இன்னும் மோசமாக்கும்.!

  அதிகமாக உழைக்கவோ வெளியே செல்லவோ கூடாது: ஃப்ளூ (சளிக்காய்ச்சல்) பாதிப்பு ஏற்பட்ட முதல் சில நாட்களுக்கு நீங்கள் உங்கள் உடலை பெரிதாக வருத்தி கொள்ளாமல் நன்கு ஓய்வெடுக்க வேண்டும். சளி மற்றும் ஜலதோஷம் பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும் என்பதால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நாட்களை ஓய்வெடுக்க நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். போர்வையை போர்த்தி கொண்டு நன்றாக தூங்கலாம், இல்லையெனில் விரும்பிய புத்தகங்களை படிக்கலாம், டிவி பார்க்கலாம். ஆனால் வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள். கொஞ்சம் குணமடைந்தது போல இருக்கிறது என நீங்கள் ரெஸ்ட் எடுக்காமல் வெளியே சென்று வந்தால் நிலைமை மோசமாக கூடும். எனவே வேலை, பள்ளி அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை சந்திக்க வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 59

  சளி இருக்கும்போது இந்த 4 விஷயங்களை மட்டும் பண்ணாதீங்க.. நிலமையை இன்னும் மோசமாக்கும்.!

  குறைந்த அளவு திரவங்களை எடுத்து கொள்ள கூடாது: சளிக்காய்ச்சலின் அறிகுறிகளை கட்டுப்படுத்த ஏராளமான திரவங்களை குடிப்பது அவசியம். சிக்கன் நூடுல் சூப் போன்ற வின்டர் சூப்ஸ், இஞ்சி மற்றும் கெமோமில் போன்ற காஃபின் இல்லாத சூடான ஹெர்பல் டீ-க்கள் போன்றவை காய்ச்சலை எதிர்த்து போராட முக்கியமானவை. காய்ச்சல் அறிகுறிகளை குறைக்க சுடுநீரில் லெமன் பிழிந்து குடிப்பது, ஃப்ரெஷ்ஷான பழங்களில் ஜூஸ் போட்டு குடிப்பது உள்ளிட்டவை நன்மைகளை அளிக்கும்.

  MORE
  GALLERIES

 • 69

  சளி இருக்கும்போது இந்த 4 விஷயங்களை மட்டும் பண்ணாதீங்க.. நிலமையை இன்னும் மோசமாக்கும்.!

  மோசமான உணவுப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்: உடல்நிலை சரியில்லாத போது உங்களால் அதிகம் சாப்பிட முடியாவிட்டாலும் அல்லது விரும்பாவிட்டாலும் நல்ல ஊட்டச்சத்து மிக்க ஆகாரம் முக்கியம். எனவே ஆரஞ்சு, மாதுளை, ஸ்ட்ராபெர்ரி மற்றும் பல சீசன் பழங்களையும், கீரை மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு (சக்கரவள்ளி கிழங்கு) போன்ற குளிர்கால காய்கறிகளையும் டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 79

  சளி இருக்கும்போது இந்த 4 விஷயங்களை மட்டும் பண்ணாதீங்க.. நிலமையை இன்னும் மோசமாக்கும்.!

  ஆரோக்கியத்தில் குறைந்த கவனம் செலுத்த கூடாது: காய்ச்சல் அறிகுறிகளை போக்க நீங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உதாரணமாக மூக்கடைப்பு இருந்தால் சுவாசத்தை சீராக்க ஸ்டீம் ப்ரீத் (ஆவி பிடித்தல்) எடுக்கலாம் அல்லது ஹாட் ஷவர் செய்யலாம். ஒருவேளை அறிகுறிகள் மோசமடைந்தால் மருத்துவரை அணுக வேண்டும். இதனால் உங்களுக்கு சரியான சிகிச்சை கிடைக்கும் மற்றும் எதிர்பார்க்கும் நிவாரணமும் கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 89

  சளி இருக்கும்போது இந்த 4 விஷயங்களை மட்டும் பண்ணாதீங்க.. நிலமையை இன்னும் மோசமாக்கும்.!

  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசி: இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு தடுப்பூசி போட்டு கொள்வதன் மூலம் தடுக்க கூடிய நோயாகும். இது தொடர்பான சிக்கல்களில் பாதுகாக்க மக்கள் பின்பற்ற கூடிய பல நடவடிக்கைகள் உள்ளன. சளி, காய்ச்சலிலிருந்து தற்காத்து கொள்ள நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம். குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணையை பின்பற்றும் நேரம் பெரியவர்கள் வருடாந்திர ஃப்ளூ தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும். சமீபத்திய வேரியன்ட்டிற்கு ஏற்ப காய்ச்சல் தடுப்பூசிகள் உருவாக்கப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசி பெறுவது முக்கியமானது.

  MORE
  GALLERIES

 • 99

  சளி இருக்கும்போது இந்த 4 விஷயங்களை மட்டும் பண்ணாதீங்க.. நிலமையை இன்னும் மோசமாக்கும்.!

  பின்பற்ற வேண்டியவை: சோப்பு அல்லது ஆல்கஹால் சார்ந்த சானிடைசரை பயன்படுத்தி கைகளை அடிக்கடி கழுவுதல், கண்கள், மூக்கு அல்லது வாயை தொடுவதை தவிர்ப்பது மற்றும் அடிக்கடி தொடும் பொருட்களை கிருமி நீக்கம் செய்வது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை தொடர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். நெரிசலான இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும்.

  MORE
  GALLERIES