ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் பல விஷயங்கள் உள்ளன, பலவீனமான வலி சில நேரங்களில் குமட்டல், தலைசுற்றல் மற்றும் ஒளி மற்றும் ஒலிக்கு சத்தம் மண்டைக்குள் கேட்கும். இதுபோன்ற அறிகுறிகளுடன் நீங்கள் நீண்ட காலமாக ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டு வருகிறீர்கள் எனில் சில உணவுகள் உங்கள் தலைவலியை தூண்டும். எனவே அவை என்னென்ன உணவுகள் என தெரிந்துகொள்ளுங்கள். இனி அவற்றை தவிர்ப்பது நல்லது.
சிலருக்கு தலைவலி ஏற்படுவதற்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பே ஒற்றைத் தலைவலி அறிகுறிகள் ஆரம்பிக்கலாம் என்று அவர் கூறுகிறார். இது 'ப்ரோட்ரோம்' நிலை என்று அழைக்கப்படுகிறது. அதன் அறிகுறிகளாக பசி, சோர்வு அல்லது குறைந்த ஆற்றல், மனச்சோர்வு, அதிவேகத்தன்மை, எரிச்சல் அல்லது கழுத்து விறைப்பு ஆகியவை அடங்கும். ஒற்றைத் தலைவலி கடுமையாக நரம்பு துடிக்கும் வலி அல்லது துடிக்கும் உணர்வு இருக்கும். இது பொதுவாக தலையின் ஒரு பக்கத்தில் மட்டுமே இருக்கும். அவ்வாறு தலைவலி இருக்கும்போது குமட்டல் அல்லது வாந்தி, அல்லது ஒளியின் தீவிர உணர்திறன் (போட்டோபோபியா) மற்றும் ஒலி (ஃபோனோபோபியா) ஆகியவையும் இருக்கும்.
பதப்படுத்தப்படும் இறைச்சிகள்: நிறம் மற்றும் சுவையைப் பாதுகாக்கும் நைட்ரேட்டுகள் இறைச்சிகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. டெலி மீட், ஹாம், ஹாட் டாக், சாசேஜ் ஆகியவற்றில் காணப்படுகின்றன. இந்த உணவுகள் நைட்ரிக் ஆக்சைடை இரத்தத்தில் வெளியிடுகின்றன, இது மூளையில் உள்ள இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்யும் என்று ஹெல்த்லைன் ஆய்வு கூறுகிறது.