முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » உங்கள் குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!

உங்கள் குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!

Gut Health : உங்கள் குடல் நல்ல நிலையில் இருந்தால், ​​உங்கள் உடலின் மற்ற பகுதிகளும் நல்ல நிலையில் இருக்கும்.

  • 17

    உங்கள் குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!

    குடல் - உடலின் இரண்டாவது மூளை என்று அடிக்கடி கூறப்படுவது வெறும் வாய் வார்த்தைக்காக அல்ல. உடல் உணர்ச்சிகளின் நன்னிலை, நோயெதிர்க்கும் அமைப்பு, நாள்பட்ட நோய், தூக்க சுழற்சி உட்பட, உடலில் உள்ள பல அமைப்புகளுக்கும் குடலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இன்னும் எளிமையாக கூற வேண்டும் என்றால், உங்கள் குடல் நல்ல நிலையில் இருந்தால், ​​உங்கள் உடலின் மற்ற பகுதிகளும் நல்ல நிலையில் இருக்கும்!

    MORE
    GALLERIES

  • 27

    உங்கள் குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!

    ஏனெனில் உங்கள் குடல், செரிமானம் முதல் மூளை மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு வரை அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. மேலும் உங்கள் குடல் சரியாக செயல்படவில்லை என்றால், அது உடலில் ஏற்படும் சில மாற்றங்கள் / தாக்கங்கள் வழியாக உங்களுக்கு சிக்னல்களை கொடுக்கும், அதாவது சில அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

    MORE
    GALLERIES

  • 37

    உங்கள் குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!

    வயிற்று அசௌகரியங்கள், சோர்வு, அதிகப்படியான பசி, தற்செயலான எடை மாற்றங்கள், தோல் பிரச்சினைகள் மற்றும் ஒவ்வாமை, உங்களின் நோயெதிர்ப்பு அமைப்பு தவறாக உங்கள் உடலையே தாக்குவது, ஒற்றைத் தலைவலி போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஆகமொத்தம் ஆரோக்கியமற்ற குடல் உங்கள் உடலில் உள்ள மற்ற பகுதிகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அர்த்தம். அப்படியாக உங்கள் குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை வெளிப்படுத்தும் சில முக்கியமான அறிகுறிகள் இதோ:

    MORE
    GALLERIES

  • 47

    உங்கள் குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!

    நாள்பட்ட வயிற்றுப்போக்கு, சோர்வு மற்றும் தலைவலி:இந்த அறிகுறிகள், குடலில் கசிவுகள் இருப்பதை குறிக்கலாம். இது ஒரு ஆரோக்கியமற்ற 'கட் லைனிங்' (Gut Lining) ஆகும், இது உயிரணுக்களுக்கு இடையில் உள்ள இடைவெளிகளாகும். இது கீழ் திசுக்களின் வழியாக ஓரளவு செரிமானம் செய்யப்பட்ட உணவு, நச்சுகள் மற்றும் 'பக்ஸ்' போன்றவை நுழைய அனுமதிக்கிறது. இது குடலில் வீக்கம் மற்றும் பாக்டீரியா மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

    MORE
    GALLERIES

  • 57

    உங்கள் குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!

    இதற்கு சிகிச்சையளிக்க, வீக்கத்தை ஊக்குவிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். அதாவது 'குடல் பாக்டீரியாக்கள்' என்று கருதப்படும் ஆல்கஹால், அதிக சர்க்கரை அல்லது ஹை-சாச்சுரேட்டட் உணவுகளை தவிர்க்கவும். மேலும், இழந்த குடலின் ஆரோக்கியத்தை மீண்டும் உருவாக்க உங்கள் உணவில் சத்தான, பதப்படுத்தப்படாத மற்றும் ஆன்டி-இன்ஃப்ளேமட்டரி உணவுகளை சேர்க்கவும்.

    MORE
    GALLERIES

  • 67

    உங்கள் குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!

    சில உணவுகளை சாப்பிட்ட பிறகு தொடர்ந்து நெஞ்செரிச்சல் அல்லது ஆசிட் ரிஃப்ளக்ஸ் இருப்பது :உங்கள் செரிமான மண்டலத்தில் அமில சூழல் (acidic environment) அதிகமாக இருப்பதால் இது நிகழலாம். இது மிக வேகமாக சாப்பிடுவது, அதிக காரமான உணவுகள் அல்லது காபி, சாக்லேட்டுகள் போன்ற சில குறிப்பிட்ட உணவுகளின் விளைவாக ஏற்படலாம். ஒன்று மோசமான குடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

    MORE
    GALLERIES

  • 77

    உங்கள் குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!

    அவ்வாறு நிகழாமல் இருப்பதை தவிர்க்க, உட்கொள்ளும் உணவை சிறிய அளவில் மற்றும் அடிக்கடி உண்ணுங்கள் மற்றும் உணவை உட்கொண்ட 2 அல்லது 3 மணிநேரம் காத்திருந்து பிறகு படுக்கைக்கு செல்லவும். குறிப்பாக மேற்குறிப்பிட்ட உணவு உட்கொள்ளும் முறையை மற்றும் உணவுகளை தவிர்க்கவும்.

    MORE
    GALLERIES