உடலுறவு மற்றும் அது தொடர்புடைய செயல்பாடுகள் மகிழ்ச்சி அளிக்கிறது, என்றாலும் அவற்றில் சுகாதாரமில்லை என்றால் சில மோசமான பாதிப்புகளும் உண்டு. ஆம், STIs என்று சொல்லப்படும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் பெரும்பாலும் சுகாதாரமற்ற உடலுறவு போன்ற செயல்பாடுகளால் வருகின்றன. இவை பரவுவதை தடுக்க நாம் தவிர்க்க வேண்டிய பல நடவடிக்கைகள் உள்ளன. இருப்பினும், சில கண்டறியப்படாத வழிகளினாலும் இவை பரவலாம். பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தக்கூடிய மற்றும் நீங்கள் தவிர்க்க வேண்டிய சிலவற்றை பற்றி இனி பார்ப்போம்.
முத்தம் : உங்கள் வாயைச் சுற்றி குளிர் புண் இருந்தால், நீங்கள் முத்தமிடுவதை தவிர்க்க வேண்டும். பொதுவாக ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் வகை 1 (HSV-1) என்று அழைக்கப்படும் திறந்த புண், வாய்வழி ஹெர்பெஸ் உள்ள ஒருவருடன் தொடர்பு கொள்வதன் மூலம், அது பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளாக பரவலாம். இந்த புண் இருக்கும் போது, யோனி பகுதியில் HSV-1 வைரஸை பெறுவதைத் தவிர்ப்பதற்காக வாய்வழி உடலுறவையும் தவிர்க்க வேண்டும். இல்லையேல் விளைவுகள் பெரிதாக இருக்கும்.
பிரஷ் மற்றும் ரேஸர்களை பகிர்தல் : பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்திய பொருட்களை பகிர்வது ரத்தத்தில் பரவும் நோய்கள் ஏற்பட வழிவகுக்கும். இதில் ஹெபடைடிஸ் பி, சி மற்றும் எச்ஐவி ஆகியவை அடங்கும். அதே போன்று, நீங்கள் ஒருபோதும் ஊசிகளையும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அதே போன்று மற்றவர்களின் ரேஸர் அல்லது பிரஷை பயன்படுத்த கூடாது.
அசுத்த உணவு : பாதிக்கப்பட்ட உணவு அல்லது பானங்கள் ஹெபடைடிஸ் A வைரஸை பரப்பலாம், மேலும் இது உடலுறவின் மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது. எனவே, மோசமான சூழலில் தயாரிக்கப்படும் உணவுகளை ஒரு போதும் சாப்பிடாதீர்கள். மேலும், பொது சுகாதாரம் வளர்ச்சியடையாத நாடுகளில் இந்த வகை வைரஸ் பாதிப்பு மிகவும் பொதுவானதாக உள்ளது.
தோல் தொடர்பு : உடல் ரீதியான தொடர்பு என்பது சாதாரணமாக HPV வைரஸை பரப்ப வாய்ப்பு அதிகம். இதனால் பிறப்புறுப்பிலும் பாதிப்புகள் ஏற்படலாம். சிபிலிஸ் நோய்த்தொற்றின் ஆரம்ப நிலை பொதுவாக சான்க்ரே அல்லது புண்ணுடன் நேரடி தொடர்பு மூலம் பரவும் என்பதால், புண் இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒருவரைத் தொடுவதையோ அல்லது அவரது தோலின் மீது உராய்வதையே நீங்கள் தவிர்க்க வேண்டும்.
மேலும் பல.. பாதிக்கப்பட்ட நபருடன் ரேசர் போன்ற சீர்ப்படுத்தும் கருவிகளைப் பகிர்வது இரத்தத்தில் பரவும் நோய்கள் எளிதாக ஏற்பட வழிவகுக்கும். பயன்படுத்தப்பட்ட துண்டுகள், அணிய கூடிய துணிகள், ரேஸர்கள், உள்ளாடைகள் அல்லது நீச்சலுடைகளை மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கவோ அல்லது மடறவர்களுக்கு கொடுக்கவோ கூடாது. ஏனெனில் இவை பிறப்புறுப்பு HPV வைரஸ் பரவுதலில் ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம். எனவே எங்கு சென்றாலும் உங்களுக்கான அடிப்படை பொருட்களை தனியாக எடுத்து செல்வது நல்லது.