முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » நீங்கள் வெளியே சென்றால் மட்டுமல்ல.. வீட்டில் இருக்கும்போதும் சன்ஸ்கிரீன் அவசியம்.. ஏன் தெரியுமா..?

நீங்கள் வெளியே சென்றால் மட்டுமல்ல.. வீட்டில் இருக்கும்போதும் சன்ஸ்கிரீன் அவசியம்.. ஏன் தெரியுமா..?

நீங்கள் வெயிலில் வெளியே சென்றாலும், வீட்டிலேயே இருந்தாலும் தினசரி சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்ல பலன்களை தரும். வீட்டிற்குள் இருக்கும் போதும் ஏன் சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்கள் இங்கே.

 • 17

  நீங்கள் வெளியே சென்றால் மட்டுமல்ல.. வீட்டில் இருக்கும்போதும் சன்ஸ்கிரீன் அவசியம்.. ஏன் தெரியுமா..?

  வீட்டிலிருக்கும் போதும் நீங்கள் ஏன் சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்கள் இங்கே...நீங்கள் எந்த ஒரு தோல் பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றினாலும் அதில் அவசியம் சன்ஸ்கிரீன் இருக்க வேண்டும். பொதுவாக வெயிலில் வெளியே செல்லும் போது பலரும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதை வீட்டிற்குள் இருக்கும் போதும் பயன்படுத்துவது அவசியமா..!

  MORE
  GALLERIES

 • 27

  நீங்கள் வெளியே சென்றால் மட்டுமல்ல.. வீட்டில் இருக்கும்போதும் சன்ஸ்கிரீன் அவசியம்.. ஏன் தெரியுமா..?

  வெளியில் செல்லும் போது சன்ஸ்கிரீன் அப்ளை செய்வதும், தேவைக்கேற்ப மீண்டும் அதை பயன்படுத்துவதும் சருமத்தை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கைகள். ஆனால் நீங்கள் வெயிலில் வெளியே சென்றாலும், வீட்டிலேயே இருந்தாலும் தினசரி சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்ல பலன்களை தரும். தவறாமல் சன்ஸ்கிரீனை பயன்படுத்துவதால் ஏஜிங் ப்ராசஸை தாமதப்படுத்தலாம்,தோல் புற்றுநோயை தவிர்க்கலாம். வீட்டிற்குள் இருக்கும் போதும் ஏன் சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்கள் இங்கே.

  MORE
  GALLERIES

 • 37

  நீங்கள் வெளியே சென்றால் மட்டுமல்ல.. வீட்டில் இருக்கும்போதும் சன்ஸ்கிரீன் அவசியம்.. ஏன் தெரியுமா..?

  ப்ளூ லைட்டிற்கு எதிராக பாதுகாக்கிறது : ஸ்மார்ட் ஃபோன்கள், டேப்லெட்ஸ், கம்ப்யூட்டர்ஸ், லேப்டாப் மற்றும் தொலைக்காட்சிகள் போன்ற டிஜிட்டல் ஸ்கிரீன்கள் ப்ளூ லைட்டை வெளியிடுகின்றன. இவை சன்பர்னை ஏற்படுத்தாவிட்டாலும், சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். ப்ளூ லைட்டால் உற்பத்தி செய்யப்படும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ் வயதான செயல்முறையை விரைவுபடுத்தும் மற்றும் ஏஜ் ஸ்பாட்ஸ்களில் மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்கும்.

  MORE
  GALLERIES

 • 47

  நீங்கள் வெளியே சென்றால் மட்டுமல்ல.. வீட்டில் இருக்கும்போதும் சன்ஸ்கிரீன் அவசியம்.. ஏன் தெரியுமா..?

  தோல் புற்றுநோய் வராமல் தடுக்கும் : வீட்டிற்குள் இருக்கும் போது சூரிய ஒளி தீங்கு விளைவிப்பதில்லை என பலர் நினைக்கிறார்கள். ஆனால் வீட்டிற்குள் இருந்தாலும் கூட சூரியனில் இருந்து வெளிப்படும் UVB ரேடியேஷன் Inflammatory response-ஐ தூண்டுகிறது. இதன் விளைவாக சன்பர்ன் பாதிப்பு ஏற்படுகிறது. சன்பர்ன் உரியும் போது மீதமுள்ள செல்கள் காலப்போக்கில் சேதமடைகின்றன. இதன் மூலம் தோல் புற்றுநோய் உருவாகும் அபாயம் அதிகரிக்கும். எனவே ரெகுலராக சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது கேன்சர் அபாயத்தை தவிர்க்க உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 57

  நீங்கள் வெளியே சென்றால் மட்டுமல்ல.. வீட்டில் இருக்கும்போதும் சன்ஸ்கிரீன் அவசியம்.. ஏன் தெரியுமா..?

  UV ரேடியேஷனிலிருந்து பாதுகாக்கிறது : மேகமூட்டமாக இருக்கும் நாட்களில் கூட சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்வீச்சு ஆழமாக ஊடுருவி தீங்கு விளைவிக்கும். தவிர UVB ரேடியேஷன் மேற்பரப்பிற்கு கீழே உள்ள தோல் செல்களில் ஸ்கின் டேமேஜை ஏற்படுத்தும். இந்த பாதிப்பை ஸ்பாட்ஸ் உருவாகும் வரை ஒருவரால் கண்டறிய முடியாமல் போகலாம்.

  MORE
  GALLERIES

 • 67

  நீங்கள் வெளியே சென்றால் மட்டுமல்ல.. வீட்டில் இருக்கும்போதும் சன்ஸ்கிரீன் அவசியம்.. ஏன் தெரியுமா..?

  ப்ரீ-மெச்சூர் ஏஜிங்கை தடுக்கிறது : முதுமையின் அறிகுறிகளை தடுக்க SPF 30 அல்லது SPF 30+ கொண்ட சன்ஸ்கிரீன் பயன்படுத்தப்படாவிட்டால், மிகவும் விலையுயர்ந்த தோல் பராமரிப்புப் பொருட்கள் கூட அவற்றின் முழு திறனுடன் வேலை செய்யாது என்பதே உண்மை. உரிய பயன் தரும் சன்ஸ்கிரீனை தவிர்ப்பது உங்கள் மற்ற சரும பொருட்களின் செயல்திறனை குறைக்கிறது. உங்கள் சருமத்தில் ஏற்படும் வயதாகும் அறிகுறைகளை தவிர்க்க, நீங்கள் "broad-spectrum" என்று அடையாளம் காணப்பட்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும். இவை UVA மற்றும் UVB ரேடியேஷன்கள் என இரண்டிலிருந்தும் பாதுகாக்கும் சன்ஸ்கிரீன்கள் ஆகும்.

  MORE
  GALLERIES

 • 77

  நீங்கள் வெளியே சென்றால் மட்டுமல்ல.. வீட்டில் இருக்கும்போதும் சன்ஸ்கிரீன் அவசியம்.. ஏன் தெரியுமா..?

  சருமத்தை பாதுகாக்கிறது : தினசரி மாய்ஸ்ரைஸிங் பொருட்களுடன் கலக்க கூடிய அல்லது அழகுசாதனப் பொருட்களில் சேர்க்க கூடிய Sunscreen Substitutes-களுக்கு நன்றி சொல்லுங்கள். நவீன சன்ஸ்கிரீன்ஸ் தயாரிப்புகள் ஹை-குவாலிட்டி மற்றும் சருமத்திற்கு ஊட்டமளிக்கும் கூறுகளை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. எனவே இப்போது இது மிக பயனுள்ள தயாரிப்பாக இருக்கிறது மேலும் இவை வேகமாக உறிஞ்சப்படுகிறது.

  MORE
  GALLERIES