இங்கிலாந்தின் சால்ஃபோர்டை சேர்ந்த 24 வயதான ஆசிரியை டார்சி. இவருக்கு 21 வயதாக இருந்த போது, இவரது காலர்போன்-இல் (collarbone) இருந்த ஒரு மச்சம் பெரிதாவதோடு மிகவும் கருமையாகி வருவதையும் இவருடைய தாய் கவனித்து உள்ளார்.இதனை அடுத்து நிபுணரிடம் சென்று என்ன ஏதென்று பார்த்து டெஸ்ட் செய்து கொள்ள டார்சிக்கு அவருடைய அம்மா அறிவுறுத்தி உள்ளார். தனது தாயின் வற்புத்துதலை தொடர்ந்து மருத்துவரிடம் சென்ற டார்சிக்கு ஸ்கின் கேன்சர் என்ற பேரதிர்ச்சி காத்திருந்தது. இப்போது 24 வயதான டார்சி தனது ஸ்கின் கேன்சர் ட்ரீட்மென்ட் பயணம் மற்றும் அவரது மெலனோமா (Melanoma) நோய் கண்டறிதல் எப்படி ஆச்சரியமாக மற்றும் அதிர்ச்சியாக இருந்தது என்பதை பற்றி ஷேர் செய்திருக்கிறார்.
சரும புற்றுநோய் வகைகளில் ஒன்றான மெலனோமா முகம், கை, கால், பிறப்பு உறுப்பு உட்பட உடலின் எந்தப் பாகத்திலும் வரக்கூடும். 90% மெலனோமாக்கள் சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சினால் ஏற்படுகின்றன. எனவே உங்கள் தோலில் உள்ள மச்சங்கள் அல்லது வளர்ச்சிகளில் கவனம் செலுத்துவது மெலனோமாவை கண்டறிய எளிய வழி.
டார்சிக்கு கண்டறியப்பட்ட மெலனோமா : தாயின் வற்புத்துதலை தொடர்ந்து மருத்துவரை சந்தித்தேன். ஆனால் நான் சந்தித்த மருத்துவர் காரையெலும்பில் ( collar bone ) இருந்த மசத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பற்றி கவலைப்பட ஏதுமில்லை என்று கூறி திருப்பியனுப்பி விட்டார். ஆனால் என் மனத்திற்கு மச்சத்தில் ஏற்பட்ட மாற்றம் சரியென்று படவில்லை. இதனை தொடர்ந்து மீண்டும் நிபுணரை சந்திக்க முடிவு செய்தேன். இதனை தொடர்ந்து மருத்துவர்கள் எனது காரையெலும்பில் ( collar bone ) மச்சம் இருந்த சருமத்தை வெட்டி எடுத்து டெஸ்ட் செய்தனர். இதனை தொடர்ந்து எனக்கு உடலின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடிய ஆபத்தான ஸ்கின் கேன்சரான மெலனோமா இருப்பதாக மருத்துவர்கள் என்னிடம் கூறினர் என்று குறிப்பிட்டுள்ளார் டார்சி.
அதிர்ச்சியில் உறைந்தேன் : மெலனோமா என்றால் என்ன அதன் அறிகுறிகள் என்னவென்று கூட எனக்கு தெரியாது. எனவே எனது உடலில் இருந்த மச்சம் கேன்சராக மாறி விட்டது என டாக்டர்கள் சொன்ன போது உண்மையில் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்று விட்டேன். அதன் பிறகு மருத்துவர்கள் சொன்ன வேறு எந்த விஷயத்தையும் என்னால் உள்வாங்க முடியவில்லை என கூறி இருக்கிறார் டார்சி.
மதுத்துவர்களுக்கும் அதிர்ச்சி தான் : நான் ஒருபோதும் மோசமான அல்லது கடுமையான வெயிலில் வெளியே சென்றதில்லை, சன்பர்ன் கூட ஏற்பட்டதில்லை என்று மருத்துவர்களிடம் கூறினேன். எனவே எனக்கு இந்த வகை சரும புற்றுநோய் ஏற்படும் அபாயம் எதுவுமே இல்லாத போதும் கூட நான் மெலனோமாவால் பாதிக்கப்பட்டது மருத்துவர்களையும் சேர்த்து தான் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நான் இந்த வகை கேன்சருக்கு எப்படி ஆளானேன் என்பதை மருத்துவர்களால் சரியாகக் குறிப்பிட முடியவில்லை. ஆனால் என்னுடைய வாழ்க்கை முறையை அவர்கள் காரணம் காட்டவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சி. கேன்சர் வருமளவிற்கு நான் எந்த அபாயத்திலும் என்னை ஈடுபடுத்தி கொண்டதில்லை என்றும் டார்சி கூறி இருக்கிறார்.
சர்ஜரி & மானிட்டரிங் : மெலனோமா கண்டறியப்பட்டதை தொடர்ந்து டார்சிக்கு பாதிக்கப்பட்ட பகுதியில் சர்ஜரி செய்யப்பட்டது. இந்த சர்ஜரியை தொடர்ந்து மற்றொரு சர்ஜரி மூலம் மச்சத்தை சுற்றியுள்ள சிறிதளவு தோல் பகுதியும் அகற்றப்பட்டது. இதை தவிர தனக்கு வேறு சிகிச்சை அளிக்கப்படவில்லை. எனினும் மெலனோமா உடலின் வேறு பகுதிக்கு பரவவில்லை என்பதை உறுதிப்படுத்த நிறைய ஸ்கேன்கள் எடுக்கப்பட்டன. தற்போது அடிக்கடி சருமத்தை கண்காணிப்பது மற்றும் பரிசோதிப்பது உள்ளிட்டவற்றில் மட்டுமே ஈடுபட்டு வருகிறேன் என்றார்.
எனக்கு புற்றுநோயின் அறிகுறிகள் பற்றி தெரியாமல் போய்விட்டது. ஆனால் புற்றுநோயின் அறிகுறிகளை பற்றி தெரிந்து வைத்து கொள்ள இளைஞர்களை ஊக்குவிக்கிறேன். இது அவர்களின் உயிரை காப்பாற்ற உதவும். கேன்சர் கண்டறியப்பட்ட பிறகு இப்போது என் வாழ்க்கையில் முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தை பெற்றுள்ளேன். பல விஷயங்களை முன்பை விட வேறு கோணத்தில் பார்க்கிறேன், அணுகுகிறேன். அது போல முன்பு நான் பார்த்த வேலையை விட்டுவிட்டு ஆசிரியை தொழிலுக்கு மாறினேன். ஏனென்றால் வித்தியாசமான மற்றும் பிறருக்கு அதிக பலனளிக்கும் ஒரு வேலையே செய்ய விரும்பினேன் என்று குறிப்பிட்டுள்ளார் கேன்சரிலிருந்து மீண்ட ஆசிரியை டார்சி.