முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இந்த எளிமையான பழக்கங்களே போதுமானது..!

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இந்த எளிமையான பழக்கங்களே போதுமானது..!

COVID-19 தொற்றுநோய் நம் வாழ்வின் பல்வேறு அம்சங்களை சீர்குலைத்து பலருக்கும் உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலனை பாதித்துள்ளது. இதனால் தற்போது நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் கவனம் செலுத்துவது அவசியம்.

 • 19

  ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இந்த எளிமையான பழக்கங்களே போதுமானது..!

  COVID-19 தொற்றுநோய் நம் வாழ்வின் பல்வேறு அம்சங்களை சீர்குலைத்து பலருக்கும் உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலனை பாதித்துள்ளது. இதனால் தற்போது நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் கவனம் செலுத்துவது அவசியம். இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் சில ஆரோக்கிய குறிப்புகளை விளக்கியுள்ளார், அவை என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

  MORE
  GALLERIES

 • 29

  ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இந்த எளிமையான பழக்கங்களே போதுமானது..!

  பழங்கள் சாப்பிடுங்கள் : உங்கள் நாளை சரியாக தொடங்குவது முக்கியம். எனவே பழம் மற்றும் ஊறவைத்த உலர்ந்த பழங்களுடன் உங்கள் நாளை ஸ்டார்ட் செய்யுங்கள். பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள், நோய் எதிர்ப்பு சக்தி, நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அவர் உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க வைக்க உதவுகிறது. தினமும் காலையில் எழுந்ததும் ஒரு பழம் அல்லது ஊறவைத்த பாதாம், 2 குங்குமப்பூ இழைகளுடன் ஊறவைத்த திராட்சை சாப்பிட்டு உங்கள் நாளை தொடங்கலாம்.

  MORE
  GALLERIES

 • 39

  ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இந்த எளிமையான பழக்கங்களே போதுமானது..!

  எடையை குறைப்பதிலேயே கவனம் வேண்டாம் : எடையை குறைக்க வேண்டும் என்பதை ஒருபோதும் இலக்காக அமைக்காதீர்கள். வாழ்க்கையில் மிகவும் பயனற்ற விஷயங்களில் ஒன்று எடையை குறைக்க வேண்டும் என நினைப்பதாகும். ஆனால் அதற்கு பதிலாக ஒருவர் மன அழுத்தம், அறியாமை, உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி குறித்த தகவலை அறிந்துகொண்டு அதனை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும். உடல் எடை என்பது கொழுப்பு என்பது மட்டுமல்ல, இது உங்கள் உடல் நிறைவுடன் பூமியின் ஈர்ப்பு விசைக்கு இடையிலான தொடர்பு என்பதை மட்டுமே காட்டுகிறது, எனவே நாம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்க விரும்பினால், நல்ல ஆரோக்கியத்திற்கு உடல் எடையுடன் எந்த தொடர்பும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மாறாக ஒருவர் உடற்பயிற்சி, நல்ல தூக்கம் மற்றும் சரியான உணவு போன்ற ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்ற வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 49

  ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இந்த எளிமையான பழக்கங்களே போதுமானது..!

  வெளி உணவு வேண்டாம் : எப்போதும் உங்கள் வீட்டில் தயாரித்த உணவையே உட்கொள்ளுங்கள், தவிர்க்க முடியாத நாட்களில் உங்களுக்கு அருகிலுள்ள உள்ளூர் உணவை வாங்கி சாப்பிடுங்கள், அதாவது குறைந்தபட்சம் 100 கி.மீ தூரத்திற்குள் சுத்தமான, ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்.

  MORE
  GALLERIES

 • 59

  ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இந்த எளிமையான பழக்கங்களே போதுமானது..!

  பருவகால உணவை சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுங்கள் : அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகளை தவறாமல் சாப்பிடுங்கள். உதாரணமாக கோடையில் - தர்பூசணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், ராகி போன்ற தானியங்களை சாப்பிடுங்கள்.

  MORE
  GALLERIES

 • 69

  ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இந்த எளிமையான பழக்கங்களே போதுமானது..!

  நெய்: நெய் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் சாப்பிடக்கூடாது என்பது வெறும் கட்டுக்கதை. மதிய உணவு, இரவு உணவு மற்றும் காலை உணவு உள்ளிட்ட ஒவ்வொரு உணவிலும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து கொள்வது நல்லது. ஏனெனில் நெய்யில், வைட்டமின் டி, ஏ, ஈ, கே போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 79

  ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இந்த எளிமையான பழக்கங்களே போதுமானது..!

  ஓய்வு அவசியம் : செல்போன், லேப்டாப்களின் பயன்பாடுகள் அதிகரித்து விட்டதால், தற்போது ஓய்வு நேரத்தில் கூட அதனை பயன்படுத்துவதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். நீங்கள் ஆரோக்கியமாக இருக்க அந்த கேஜெட்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஓய்வு எடுங்கள். மொபைல் ஃபோன்கள் அல்லது வேறு எந்த கேஜெட்களையும் சாப்பிடும்போது ஒதுக்கி வைக்கவும்.

  MORE
  GALLERIES

 • 89

  ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இந்த எளிமையான பழக்கங்களே போதுமானது..!

  உடற்பயிற்சி: நல்ல ஆரோக்கியத்திற்கும் மனநிலையுக்கும் உடற்பயிற்சி அவசியம். ஆரோக்கியமான உணவைப் போலவே உடற்பயிற்சியும் முக்கியம். உடற்பயிற்சியில் நான்கு தூண்கள் உள்ளன: அவை வலிமை, சகிப்புத்தன்மை, நிலைத்தன்மை மற்றும் நீட்சி என விளக்குகிறார் ருஜுதா திவேகர். தினமும் குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சி அல்லது வாரத்திற்கு 3 மணிநேரம் உடற்பயிற்சி அவசியம். அதிக தீவிரம் கொண்ட வொர்க்அவுட்டைத் தொடர்ந்து செய்ய வேண்டாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், எந்த மருந்தும் உடற்பயிற்சியைப் போல சக்திவாய்ந்ததாக இல்லை என்பதால் தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 99

  ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இந்த எளிமையான பழக்கங்களே போதுமானது..!

  போதுமான அளவு உறக்கம் அவசியம் : ஒரு நல்ல இரவு தூக்கம் உங்கள் உடல் குணமடைவதை உறுதி செய்கிறது. சீரான தூக்கத்திற்கு வாழைப்பழம் போன்ற ஆரோக்கியமான உணவை மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை சாப்பிட வேண்டும், இரவு 8 மணிக்குள் இரவு உணவு சாப்பிட வேண்டும். மன அழுத்தத்தை குறைக்க வேண்டும், இவற்றை சரியாக செய்துவந்தால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும். தூங்குவதற்கு முன்னர் மஞ்சள் கலந்த பால் அருந்தி வந்தாலும் நன்கு தூக்கம் வரும்.

  MORE
  GALLERIES