தலைவலி என்பது பலர் அன்றாடம் சமாளிக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. இவை, இயல்பான பிரச்சனையாக இருந்தாலும், அவை உங்கள் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும். மனச்சோர்வு, உடல்சோர்வு, உணவு பழக்கம் போன்ற பலவித காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது. பல வகையான தலைவலிகள் இருந்தாலும், டென்ஷனால் உண்டாகும் தலைவலி மிகவும் பொதுவானது. தலைவலி என்றது, நம்மில் பலர் யோசிக்காமல் மாத்திரைகளை வாங்கி போடுவோம். அது வலியையும் குறைக்கும். ஆனால், அந்த நிலை தொடர்ந்தால் பல ஆபத்துக்கள் ஏற்படும். தலைவலியை போக்கும் சில வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கு காணலாம்.
தண்ணீர் பருகுங்கள் : போதுமான அளவு தண்ணீர் குடிப்பது தலைவலி பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற உதவும். இல்லையெனில், உடலை நிரேற்றத்துடன் வைத்துக்கொள்ள உதவும் இளநீர் மற்றும் பழச்சாறுகளை பருகுவதும் நல்ல பலன் தரும். ஏனென்றால், உடலில் தண்ணீர் குறைவாக இருந்தாலும் சில சமயங்களில் தலைவலி அல்லது தலை கணம் போன்ற உணர்வுகள் ஏற்படும்.