வாய் சுகாதாரம்தான் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கிய பாதையாக இருக்கிறது. அதை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டாலே பாதி பிரச்னைகளை தவிர்க்கலாம். அந்த வகையில் சுகாதாரமற்ற பழக்கங்கள் மட்டுமன்றி உணவுகள் மூலமாகவும் வாயில் சொத்தைப்பல் வர காரணமாக இருக்கின்றன. இது பற்களை அரித்து எந்த உணவையும் சாப்பிட முடியாமல் தீராத வலியையும் தரும். ஆரம்ப நிலை சொத்தைப் பல் வலி எனில் வீட்டுக் குறிப்புகளைக் கொண்டு சரி செய்யலாம். அவை என்னென்ன பார்க்கலாம்.
சுடுநீர் : வெதுவெதுப்பான சுடுநீர் கூட பல் வலிக்கு இதமாக இருக்கும். எனவே வெதுவெப்பான நீருடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வாயை நன்கு கொப்பளித்து துப்புங்கள். இதை வலி வரும்போது மட்டுமல்ல பொதுவாகவே உணவு சாப்பிட்டபின் செய்து வந்தால் உணவுத் துகள்கள் சிக்கி இருந்தாலும் வெளியேறும். சொத்தைப் பல் வருவதையும் தவிர்க்கலாம்.