நமக்கு சில நேரங்களில் வைரஸினால் ஏற்படும் சளி, காய்ச்சல் போன்றவைக் கூட ஒரிரு நாள்களில் சரியாகிவிடும். ஆனால் a இவற்றையெல்லாம் சரி செய்வதற்கு இனி நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம். வீட்டில் உள்ள மஞ்சள் தூள், தேன், எலுமிச்சை, துளசி, மிளகு போன்ற உணவுப்பொருள்களைப் பயன்படுத்தி தீர்வு காணலாம். எப்படி என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்ளலாம்..
எலுமிச்சை : எலுமிச்சையில் வைட்டமின்கள் உள்பட பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் தொண்டை புண் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. எனவே நீங்கள் எலுமிச்சை சாறை சூடான தண்ணீரில் கலந்துக் குடிக்கலாம். உங்களது சுவைக்கு ஏற்ப சர்க்கரையை சேர்ந்து பருகலாம். ஆனால் சர்க்கரை பிரச்சனை உள்ளவர்கள் சர்க்கரைக்கு பதிலாக சிறிதளவு உப்பு சேர்த்து குடிக்கலாம்.
எனவே நீங்கள் இதனை தயார் செய்வதற்கு முதலில், ஒரு கப் தண்ணீர் எடுத்துக்கொண்டு நன்கு கொதிக்க வேண்டும். பின்னர் அதனுடன் சிறிதளவு மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். இதோடு கொதிக்கும் நீரில் புதினா இலைகளை சேர்த்து உங்களது சுவைக்கு ஏற்ப உப்பு அல்லது சர்க்கரை கலந்து பருகலாம். மேலும் தொண்டை வலியை சரிசெய்வதற்கு சூடான நீரில் தேன் கலந்து சாப்பிடும் போது தொண்டை பிரச்சனையை சரிசெய்யலாம்.