நமது உடலில் அமிலங்களின் பங்கு மிக முக்கியமானதாக இருந்து வருகிறது. முக்கியமாக உணவை செரிப்பதற்கும், மற்றும் பல இதர வேலைகளுக்கும் அமிலங்கள் சரியான அளவில் சுரக்க வேண்டியது அவசியம். அவை தேவைக்கு அதிகமாக சுரந்தாலோ அல்லது குறைந்த அளவில் சுரந்தாலோ உடலின் சமநிலை பாதிக்கபட்டு லேசான அறிகுறியில் துவங்கி உடல் உறுப்புகளை செயலிழக்கும் அளவிற்கு கொண்டு செல்ல கூடும்.
எனவே எப்போதும் இந்த அமிலத்தன்மையை சமநிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம். சிலருக்கு மாமிசம் உண்பதால் உடலில் அமில தன்மை அதிகரிக்கும். எனவே உண்ணும் உணவிலும் கவனமாக இருக்க வேண்டும். உடலில் அமிலத்தன்மை அதிகமாகி விட்டால் அதனை மிக எளிதில் கண்டறிந்து விடலாம் ஏனெனில் அமிலத்தன்மை அதிகரிப்பதற்கான பல அறிகுறிகளை நமது உடல் வெளிப்படுத்த துவங்கிவிடும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதனை பித்தம் என்றும் கூறுவர். அப்படி உடல் வெளிப்படுத்தும் சில அறிகுறிகளை வைத்து அமிலத்தன்மை அதிகமாகி விட்டதை கண்டறியலாம்.
1.சுவாசப் பிரச்சினைகள் : உடலில் அமிலத்தன்மை அதிகமாகிவிட்ட நிலையில், அவை நேரடியாக சுவாசத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். அது மட்டும் அல்லாமல் சளி கட்டுதல் அதிகமாகி அவை தொண்டையில் நின்று விடும். இதனால் சாதாரணமாக பேசுவதும் மூச்சு விடுவதும் கூட கடினமாகிவிடும். வெறும் 20% மக்கள்தான் அசிடிக் எனப்படும் இந்த அமில பிரச்சனையால் நெஞ்செரிச்சல் போன்ற கோளாறுகளை சந்திக்கின்றனர். மற்ற அனைவருக்கும் சுவாச பிரச்சனை தான் முதல் அறிகுறியாக தோன்றுகிறது. நாள்பட்ட இருமல், நெஞ்சு வலி, சைனஸ் போன்றவையும் உடலில் அமிலத்தன்மை அதிகரிப்பதால் ஏற்படக்கூடும்.
ஒரு முறை நீங்கள் உங்கள் உடலில் அமிலத்தன்மை அதிகம் இருப்பதை கண்டறிந்தாலோ அல்லது அவ்வாறு இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அதனை முடிந்த அளவு சீக்கிரத்தில் குணப்படுத்துவதற்கு சிகிச்சை எடுக்க வேண்டும். இதனால் அது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்காமல் விரைவில் குணப்படுத்தி உறுப்புகள் சேதமடைவதை தவிர்க்க முடியும்.