சிரோசிஸ் என்றால் என்ன? கொழுப்பு படிந்த கல்லீரலுக்கு நீண்டகாலமாகவே சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால், அதன் மீதான அழற்சி அதிகரிக்கும். கல்லீரல் கொழுப்பு நோயின் இறுதிகட்ட வடிவம் தான் சிரோசிஸ். இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உயிர் அபாயம் ஏற்படும். ஆகவே, கல்லீரல் கொழுப்பு நோய் குறித்து உணரத்தகுந்த அறிகுறிகள் தொடர்பாக நாம் விழிப்புணர்வு கொண்டிருக்க வேண்டும்.
கைகளில் அறிகுறி : உடலில் உள்ள அனைத்து ரத்தமும் கல்லீரல் வழியாக சுத்திகரிக்கப்படும். ஆனால், கல்லீரலில் இந்த செயல்பாடு முறையாக நடைபெறவில்லை என்றால் அதன் அறிகுறிகள் கைகளில் தெரிய தொடங்கும். உள்ளங்கைகள் சிவந்து காணப்பட்டால், கைகளில் உள்ள ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தமாகும்.
பிற அறிகுறிகள் : சிரோசிஸ் தீவிரமடைய தொடங்கும் நிலையில் மேலும் பல அறிகுறிகளை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். சோர்வு, ரத்தக்கசிவு, பசியின்மை, குமட்டல், கால்கள், பாதங்களில் வீக்கம், உடல் எடை குறைவு, சருமத்தில் அரிப்பு, மஞ்சள்காமாலை, வயிற்றில் நீர் கோர்த்துக் கொள்வது, சருமத்தில் சிலந்தி வலைபோல ரத்த நாளங்கள் தென்படுவது ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும்.
நோய் அபாயங்கள் : அதிக உடல் எடை, நீரிழிவு நோய், இன்சுலின் குறைவு, தைராய்டு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் போன்றவை சிரோசிஸ் ஏற்படுவதற்கான காரணங்கள் ஆகும். புகைப்பிடிப்பவர்கள், மது அருந்துபவர்களுக்கு இந்த நோய்க்கான அபாயம் கூடுதலாக இருக்கும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.