அகத்தின் அழகை முகத்திலேயே கண்டு விட முடியும் என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு முகம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஒருவரின் முகத்தை வைத்தே அவரது அகத்தின் அழகு மட்டும் இல்லாமல் அவரது உடலின் ஆரோக்கியத்தையும் நம்மால் கூறி விட முடியும். ஏனெனில் நமது உடல் உறுப்புகளிலோ அல்லது நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளிலோ ஏதேனும் குறைபாடுகள் ஏற்படும்போது நமது முகத்தில் அவற்றுக்கான அறிகுறிகள் உடல் வெளிப்படுத்தும்.
முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் : இது பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனையாகும். முகத்தில் ஒருவருக்கு கரும்புள்ளிகள் தோன்றும் பட்சத்தில் அவரது உடலில் வைட்டமின் டி குறைபாடு உள்ளது என்று அர்த்தம். இந்த அறிகுறிகள் ஒருவருக்கு தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கேற்ற ஊட்டச்சத்து மிகுந்த மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
முகப்பரு : முகப்பருக்கள் பெரும்பாலும் இளம் வயதினரின் பதின்ம காலங்களில் உருவாவது தான். ஆனால் சில சமயங்களில் முகத்தில் ஏற்படும் முகப்பருக்களானது நாம் உட்கொள்ளும் உணவினாலும், வயிற்றின் ஆரோக்கியம் குறைபட்டிருப்பதையும் சுட்டிக் காட்டுவதற்கான அறிகுறிகள் ஆகும். இவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்த சரி செய்யவில்லை எனில் அவை நாளடைவில் முகத்தில் அதிக முகப்பருக்களை ஏற்படுத்தக்கூடும்.