ஆனால் இந்த நிலை வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு இப்பொழுது கொஞ்சம் கூட இல்லை. இப்படி நீண்ட நேரம் உட்கார்ந்து வேலைப் பார்க்கும் பொழுது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பல பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். வேலை மட்டுமில்லை நம்முடைய பெரும்பாலான பொழுதுபோக்குகள் டிவி, மொபைல் அல்லது லேப்டாக்களில் தான்.
இதுக்குறித்து அமெரிக்கன் ஹார்ட் அசோசியஷேன் தெரிவித்த தகவலின் படி, கடந்த 1950 முதல் உட்கார்ந்த நிலையில் வேலைப்பார்ப்பது என்பது 83% அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது. இந்த சூழலில் நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலைப் பார்ப்பதால் என்னென்ன பாதிப்புகள்? ஏற்படுகிறது என்பது குறித்து இங்கே அறிந்து கொள்வோம்..
ஆயுட்காலம் குறைதல்... வீடுகளில் அல்லது அலுவலகத்தில் நீண்ட நேரம் வேலைப்பார்த்தால் எப்படி உங்களின் ஆயுள்காலம் குறைகிறது? என நீங்கள் யோசிக்கலாம். இந்த கூற்று உண்மை தான். நீங்கள் அதிக நேரம் கணினி அல்லது லேப்டாப் முன்னிலையில் உட்கார்ந்து வேலைப்பார்க்கும் போது இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் உங்களின் ஆயுட்காலம் குறைகிறது. இதோடு மனநலம் சார்ந்த பிரச்சனைகள், பதட்டம் அல்லது மனச்சோர்வு போன்றவை உருவாகும் அபாயமும் அதிகரிக்கிறது.
முதுகு மற்றும் கழுத்தில் வலி : பொதுவாக நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தாலே உங்களது முதுகில் வலி ஏற்படும். ஆம் அதிக நேரம் உட்கார்ந்திருக்கும் போது கீழ் முதுகு, நரம்புகள், தசை நாண்கள் போன்றவற்றில் அழுத்தம் ஏற்படுவதால் முதுகு வலி ஏற்படுகிறது. இதோடு அதிக நேரம் லேப்டாப் முன்னிலையில் உட்கார்ந்து வேலைப்பார்க்கும் போது கழுத்திலும் வலி ஏற்படுகிறது.