பாலியல் உறவு வைத்துக் கொள்வது ஒன்றும் உடல் ஆரோக்கியத்திற்கு விரோதமான காரியம் அல்ல. சொல்லப் போனால், பல நிலைகளில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய விஷயமாக இது இருக்கும். ஒவ்வொரு நபருக்கு எண்ணற்ற ஆசைகள் இருக்கின்றன. குறிப்பாக, பாலியல் உறவு குறித்த விஷயத்தை எடுத்துக் கொண்டால் ஒவ்வொருவரின் விருப்பங்களும் மாறுபடுகின்றன.
விரைப்புத்தன்மையை பாதிக்கும் : அதே சமயம், நீண்ட நாள்களுக்கு செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவில்லை என்றால் ஒருவரின் திறன் குறைவதும் கண்டறியப்பட்டது. சிலருக்கு விருப்பம் இருந்தாலும் கூட, உறவை மேற்கொள்ள இயலாத நிலைக்கு தள்ளப்பட்டனர். சிலருக்கு நீண்ட இடைவெளி காரணமாக செக்ஸ் உறவு குறித்த விருப்பம் அறவே இல்லாமல் போய்விட்டது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவு : பாலியல் உறவு வைத்துக் கொள்ளும்போது நம் உடலில் வெளியேறுகின்ற எண்டோர்பின்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. இதனால், நோயை எதிர்த்துப் போராட உடல் தயாராகி விடுகிறது. அதே சமயம், நீண்ட காலம் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை என்றால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றன.
ஸ்ட்ரெஸ் மற்றும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் : நமது ஸ்ட்ரெஸ் அளவுகளை உடைத்து, புத்துணர்ச்சியை தரக் கூடியது பாலியல் உறவு என்பது பெரியவர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதே சமயம், செக்ஸ் உறவும் ஒரு உடற்பயிற்சியை போன்றதுதான் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதனால் எண்ண ஓட்டம் மேம்படுகிறது மற்றும் ரத்த அழுத்தம் குறைகிறது.
இடுப்பு வலுவிழந்து போவது : நம் உடலின் இயல்பான இயக்கத்திற்கு இடுப்புப் பகுதி வலுவாக இருக்க வேண்டும். அதே சமயம், உடலுறவின்போது மிகவும் ஆக்டிவாக செயல்பட கூடிய ஒரு பகுதியாக இடுப்பு பகுதி உள்ளது. ஆகவே, இதன் மூலமாக அப்பகுதி வலுவடைகிறது. குறிப்பாக, உங்களுக்கு உச்சகட்டம் ஏற்படும் பட்சத்தில் நல்ல மாற்றங்களை உணர முடியும்.
விதைப்பை ஆரோக்கியம் குறைகிறது : பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதைப் போல, ஆண்களை வெகுவாகப் பாதிக்கக் கூடிய நோய்களில் ஒன்றாக விதைப்பை புற்றுநோய் இருக்கிறது. நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், விந்தணுவை வெளியேற்றுவதன் மூலமாக இந்த அபாயத்தை குறைக்க முடியும் என்பதுதான். ஆக, நீண்ட காலத்திற்கு நீங்கள் பாலியல் உறவை தவிர்க்கும் பட்சத்தில் விதைப்பை புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.