ஏழைகளின் பாதாம் நிலக்கடலையில், உடலுக்கு தேவையான கொழுப்பு, புரதம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் B போன்ற சத்துக்கள் உள்ளன. இருப்பினும், நிலக்கடலையை நாம் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என உங்களுக்கு தெரியுமா? அதிகமாக வேர்க்கடலை சாப்பிட்டால் என்ன ஆகும் என்பதை இங்கே காணலாம்.
இரத்த உறைதலை தடுக்கும் : நிலக்கடலையில் உள்ள ரெஸ்வெராட்ரோல் இரத்த உறைதல் செயல்பாட்டை தடுக்கிறது. உடலில் காயம் உண்டாகும் போது ஏற்படும் அதிகளவு இரத்தப்போக்கினை கட்டுப்படுத்த இரத்தம் உறைதல் அவசியம். வேர்க்கடலையில் உள்ள சேர்மங்கள் இந்த செயல்பாட்டை தடுக்கிறது. எந்த உணவுப்பொருளாக இருந்தாலும் நாம் அளவாக எடுத்துக்கொண்டால் அது ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.