முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » காப்பர் பாட்டிலை இப்படி யூஸ் பண்ணா உயிருக்கே ஆபத்தாகலாம்..!

காப்பர் பாட்டிலை இப்படி யூஸ் பண்ணா உயிருக்கே ஆபத்தாகலாம்..!

அதிகப்படியான காப்பரை உட்கொள்வது உடலில் நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக உடல் உறுப்புகள் சேதமடையலாம்.

  • 18

    காப்பர் பாட்டிலை இப்படி யூஸ் பண்ணா உயிருக்கே ஆபத்தாகலாம்..!

    காப்பர் பாட்டில்களில் சேமிக்கப்பட்ட தண்ணீரை குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று பலர் கருதுகின்றனர். இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 28

    காப்பர் பாட்டிலை இப்படி யூஸ் பண்ணா உயிருக்கே ஆபத்தாகலாம்..!

    சமீப காலமாக காப்பர் பாட்டில்கள் பிரபலமடைந்து வருகின்றன. பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக பலர் காப்பர் பாட்டில்களுக்கு மாறத் தொடங்கிவிட்டனர். காப்பர் என்ற தாது நமது உடலில் பல்வேறு விதமான செயல்பாடுகளுக்கு காரணமாக உள்ளது. இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி, ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் இணைப்பு திசுக்களின் உருவாக்கம் போன்றவற்றிற்கு காப்பர் தாது உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 38

    காப்பர் பாட்டிலை இப்படி யூஸ் பண்ணா உயிருக்கே ஆபத்தாகலாம்..!

    அதுமட்டுமல்லாமல், கொலாஜன் உற்பத்தியிலும், நரம்பு செல்கள் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பின் ஆரோக்கியத்தையும் காப்பர் கவனித்துக் கொள்கிறது. ஆனால் இத்தனை நன்மைகளை வழங்கினாலும், அதனை தவறாக பயன்படுத்தினால் காப்பர் பல தீங்குகளுக்கு வழிவகுக்கும். காப்பர் பாட்டில்களில் சேமித்து வைக்கப்பட்ட தண்ணீரை பருகுவது ஒரு சில உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

    MORE
    GALLERIES

  • 48

    காப்பர் பாட்டிலை இப்படி யூஸ் பண்ணா உயிருக்கே ஆபத்தாகலாம்..!

    அதிகப்படியான காப்பரை உட்கொள்வது உடலில் நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக உடல் உறுப்புகள் சேதமடையலாம். இது குறித்து விரிவாக இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

    MORE
    GALLERIES

  • 58

    காப்பர் பாட்டிலை இப்படி யூஸ் பண்ணா உயிருக்கே ஆபத்தாகலாம்..!

    தினமும் காப்பர் பாட்டிலில் சேமிக்கப்பட்ட தண்ணீரை குடிப்பதால் என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும்? நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் ஆஃப் டயட்ரி சப்ளிமெண்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, காப்பர் பாட்டில்களில் சேமித்து வைக்கப்பட்ட தண்ணீரை குடிப்பது பல நன்மைகளை தரும். ஆனால் எல்லா நேரங்களிலும் அல்ல. ஏனெனில் காப்பர் உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. அதோடு காப்பர் பாட்டில்களில் எப்பொழுதும் தண்ணீரை சேமித்து வைத்தால், பாட்டில் எளிதாக துருப்பிடித்து விடும். துருப்பிடித்த பாட்டிலில் இருந்து தண்ணீரை நாம் பருகும் பொழுது அது மேலும் பல விதமான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

    MORE
    GALLERIES

  • 68

    காப்பர் பாட்டிலை இப்படி யூஸ் பண்ணா உயிருக்கே ஆபத்தாகலாம்..!

    காப்பர் பாட்டில்களில் ஊற்றி வைக்கப்பட்ட தண்ணீரை அதிகப்படியாக பருகுவது குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது காப்பர்நச்சுத்தன்மையின் காரணமாக ஏற்படும் அறிகுறிகள் ஆகும். இதற்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பிற்கு வழிவகுக்கும்.

    MORE
    GALLERIES

  • 78

    காப்பர் பாட்டிலை இப்படி யூஸ் பண்ணா உயிருக்கே ஆபத்தாகலாம்..!

    நீங்கள் காப்பர் பாட்டிலில் சேமித்து வைக்கப்பட்ட தண்ணீரை தினமும் பருகும் பொழுது காப்பர் என்ற தனிமம் அல்லது படிகமானது ரத்தத்தில் கலக்கத் தொடங்குகிறது. இது காலப்போக்கில் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை பாதிக்கிறது. மேலும் இதனை மூச்சு வழியாக உள்ளிழுக்கும் பொழுது இது மூக்கு மற்றும் தொண்டையில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் நீங்கள் மயக்கம் மற்றும் தலைவலியையும் அனுபவிக்க நேரலாம்.

    MORE
    GALLERIES

  • 88

    காப்பர் பாட்டிலை இப்படி யூஸ் பண்ணா உயிருக்கே ஆபத்தாகலாம்..!

    இதனை எவ்வாறு தவிர்ப்பது? காப்பர் பாட்டில்களால் ஏற்படும் தீங்குகளில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்கான ஒரே வழி, அதனை அளவாக பருகுவது மட்டுமே. காப்பர் பாட்டில்களில் சேமித்து வைக்கப்பட்ட தண்ணீரை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை மட்டுமே பருகவும். நாள் முழுவதும் இந்த தண்ணீரை பருகுவது நல்லதல்ல. இல்லையெனில் லாபத்திற்கு பதிலாக உங்களுக்கு நஷ்டங்களே ஏற்படும். மேலும் காப்பர் பாட்டிலில் தண்ணீரை ஊற்றி வைத்த 6 முதல் 8 மணி நேரம் கழித்து அந்த தண்ணீரை பருக பரிந்துரைக்கப்படுகிறது.

    MORE
    GALLERIES