ஆனால், எஸ்டிஐ தொற்றுகள் என்பது மிக எளிமையாக ஒரு நபரிடம் இருந்து அவர்களின் வாழ்க்கை துணைக்கும் பரவக் கூடியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆக, ஒரு ஆணுக்கு தொற்று ஏற்பட்டால் அதை தொடக்கத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்: ஆண்கள் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படக் கூடிய எரிச்சல் தான் எஸ்டிஐ-க்கான மிக முக்கியமான அறிகுறியாகும். பெண்களும் கூட இதேபோன்ற அறிகுறிகளை உணர நேரிடும். ஆண்களுக்கு எஸ்டிஐ ஏற்பட்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணமும், சிறுநீர் கழிக்கும்போது கடுமையான வலியும் ஏற்படும்.
அரிப்பு மற்றும் சிவந்த தடிப்பு: ஆண்களின் பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு ஏற்படுவதும், அதனுடன் சிவந்த தடிப்புகள் உண்டாகுவதும் எஸ்டிஐ-க்கான அறிகுறிகள் ஆகும். சிறுநீர் கழித்த பிறகு முறையாக சுத்தம் செய்யாமல் இருப்பது, அழுக்கான உள்ளாடைய அணிவது போன்ற காரணங்களால் இதுபோன்று உண்டாகலாம். இதுபோன்ற அறிகுறிகள் தெரிந்தால் தாமதம் செய்யாமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.