முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » உடலுறவுக்கு முன் கைகளை சுத்தமாக கழுவுவது அவசியம்..! ஏன் தெரியுமா..?

உடலுறவுக்கு முன் கைகளை சுத்தமாக கழுவுவது அவசியம்..! ஏன் தெரியுமா..?

தாம்பத்ய உறவுக்கு முன்னதாக கடைசி நொடி வரையிலும் செல்ஃபோன் பயன்படுத்தும் பழக்கமும் இருக்கிறது. செல்ஃபோன்களில் மிக அதிகப்படியான கிருமிகள் இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

 • 18

  உடலுறவுக்கு முன் கைகளை சுத்தமாக கழுவுவது அவசியம்..! ஏன் தெரியுமா..?

  சாப்பிடுவதற்கு முன் கைகளை கழுவுவதும், கழிவறைக்கு சென்று வந்தால் கைகளை கழுவுவதும் தான் பொதுவாக நாம் கடைப்பிடிக்கின்ற வழக்கம். இது தவிர, கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவ்வபோது கைகளை கழுவும் பழக்கத்தை கடைப்பிடித்தோம். இது தவிர மற்ற சமயங்களில் கைகளை கழுவும் பழக்கம் பெரும்பாலானோருக்கு கிடையாது.

  MORE
  GALLERIES

 • 28

  உடலுறவுக்கு முன் கைகளை சுத்தமாக கழுவுவது அவசியம்..! ஏன் தெரியுமா..?

  ஆனால், பாலியல் உறவு கொள்ள வேண்டும் என்ற ஆசையும், குறுகுறுப்பான எண்ணமும் நம் மனதில் தோன்றிய பிறகு உடனடியாக நாம் செய்ய வேண்டிய காரியம் கைகளை கழுவுவதுதான். ஏனென்றால் தாம்பத்ய உறவின்போது பிறப்புறுப்புகளின் மீது நம் கைகளை பயன்படுத்துகின்ற சமயத்தில் கைகளில் உள்ள கிருமிகள் நம் உடலுக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 38

  உடலுறவுக்கு முன் கைகளை சுத்தமாக கழுவுவது அவசியம்..! ஏன் தெரியுமா..?

  நம் கைகள் மூலமாக பரவும் தொற்றுகள் : பொதுவாக நம் கைகளின் வழியாக பாக்டீரியா மற்றும் வைரஸ் ஆகியவை பரவக் கூடும். இவற்றில் எம்.ஆர்.எஸ்.ஏ., இ-கோலி, சல்மோனெல்லா, நோரோ வைரஸ், ரோடா வைரஸ், சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய வைரஸ்கள் போன்றவை நம் கைகளின் வழியே பரவும் தொற்றுகள் ஆகும்.

  MORE
  GALLERIES

 • 48

  உடலுறவுக்கு முன் கைகளை சுத்தமாக கழுவுவது அவசியம்..! ஏன் தெரியுமா..?

  அழுக்கான இடங்களில் ஃபோனும் ஒன்று : இரவு நேரத்தில் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் தம்பதியர்கள் பலரும், மாலையில் வீடு திரும்பியவுடன் அல்லது இரவு உணவுக்கு முன்னர் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு குளித்துவிட்டால் நம் கைகள் சுத்தமாக இருக்கும் என்று அர்த்தம் கிடையாது. ஏனென்றால் குளித்த பிறகு நாம் கிருமிகள் நிறைந்த வீட்டின் தரை தளங்கள், சோஃபா போன்றவற்றில் அமர்ந்து எழுகின்றோம்.

  MORE
  GALLERIES

 • 58

  உடலுறவுக்கு முன் கைகளை சுத்தமாக கழுவுவது அவசியம்..! ஏன் தெரியுமா..?

  மிக முக்கியமாக தாம்பத்ய உறவுக்கு முன்னதாக கடைசி நொடி வரையிலும் செல்ஃபோன் பயன்படுத்தும் பழக்கமும் இருக்கிறது. செல்ஃபோன்களில் மிக அதிகப்படியான கிருமிகள் இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

  MORE
  GALLERIES

 • 68

  உடலுறவுக்கு முன் கைகளை சுத்தமாக கழுவுவது அவசியம்..! ஏன் தெரியுமா..?

  வளர்ப்பு பிராணிகள் உண்டா.! வீட்டில் நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளை வளர்ப்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் பிராணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் தொற்றுகளின் மூலமாக 240 வகையான நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நாயை இரவில் தொட்டு, கட்டி போட்டுவிட்டு, அப்படியே படுக்கையறைக்கு செல்லும் பட்சத்தில், பிறப்புறுப்புகளில் ரிங்வார்ம்ஸ் அல்லது ரவுண்ட்வார்ம்ஸ் பரவக் கூடும்.

  MORE
  GALLERIES

 • 78

  உடலுறவுக்கு முன் கைகளை சுத்தமாக கழுவுவது அவசியம்..! ஏன் தெரியுமா..?

  முறையாக சுத்தம் செய்ய வேண்டும் : கைகளை சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் பைப்பில் கையை நீட்டி விட்டு வருவதுதான் பெரும்பாலானோர் கடைப்பிடிக்கும் பழக்கம். ஆனால், அப்படி இல்லாமல் கைகளின் ஒவ்வொரு பகுதிகளிலும், குறிப்பாக விரல் இடைவெளிகளில் முறைப்படி தேய்த்து கழுவ வேண்டும். குறைந்தபட்சம் 20 நொடிகள் கைகளை கழுவ வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 88

  உடலுறவுக்கு முன் கைகளை சுத்தமாக கழுவுவது அவசியம்..! ஏன் தெரியுமா..?

  சானிடைசர் பயன்படுத்தலாமா? ஆல்கஹால் கலந்த சானிடைசர் அனைத்து விதமான தொற்றுகளையும் அழித்துவிடும் என்று உறுதியாக கூறிவிட முடியாது. எனவே கைகளை கழுவுவதற்கு சாதாரண சோப் மற்றும் தண்ணீர் ஆகியவையே போதுமானது. உங்கள் கை விரல்களில் நகங்களை வாரம் ஒருமுறையாவது வெட்டிவிடுங்கள்.

  MORE
  GALLERIES