நிபுணர்கள் சொல்வது என்ன? பாலியல் நல மருத்துவ நிபுணர் சிராக் பண்டாரி இதுகுறித்து கூறுகையில், “எஸ்டிடி என்பதை வேறுபடுத்தி இப்போது எஸ்டிஐ என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனென்றால் இந்த எஸ்டிஐ அனைத்தையும் உள்ளடக்கியதாகவும், துல்லியமானதாகவும் இருக்கிறது. பாலியல் ரீதியாக பரவக் கூடிய அனைத்து தொற்றுகளுமே நோயை உண்டாக்குபவை அல்ல.
எளிதாக STI பாதிப்பு ஏற்படும் : மருத்துவர் சிராக் பண்டாரி இதுகுறித்து கூறுகையில், “எஸ்டிஐ குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. பெரும்பாலும் இது அறிகுறிகளை காட்டாது என்பதால் பலருக்கு தொற்று இருப்பதே தெரியாமல் இருப்பார்கள். இதனால் தங்களை அறியாமலேயே தங்கள் துணைக்கு பரப்பி விடுவார்கள். இதுபோன்ற தொற்றுகளில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், துணைக்கு பரப்பி விடாமல் இருக்கவும் அவ்வபோது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
எச்சரிக்கை தேவை : பாலியல் உறவில் ஈடுபடும்போது நமக்கெல்லாம் எஸ்டிஐ தொற்றுகள் ஏற்பட வாய்ப்பே இல்லை என்று நினைப்பவராக நீங்கள் இருக்கலாம். ஆனால், பாலியல் தொற்று ஏற்பட்ட பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நீங்கள் நினைப்பதாக அர்த்தம் அல்ல. இருப்பினும், அவ்வபோது எஸ்டிஐ தொற்றுகள் குறித்து பரிசோதனை செய்து கொள்வது உங்களை தற்காத்துக் கொள்ள உதவும்.