விவகாரத்திற்கு பிறகு அதிக கவர்ச்சி, மும்பையில் குடியேற இருப்பது, உள்ளிட்ட திரைத்துறை சார்ந்த செய்திகள் ஒரு பக்கம் இருந்தாலும் இவர் மயோசிடிஸ் என்ற ஒரு ஆட்டோ இம்யூன் குறைபாட்டால் தீவிரமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது வரை பல கட்ட சிகிச்சை பெற்றும் வரும் சமந்தா, சமீபத்தில் ‘டார்ச்சர் டைம்’ என்று ஐஸ் கட்டிகளில் மூழ்கி அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
மயோசிடிஸ் என்ற தசையுருக்கி நோய்க்கு சிகிச்சையளித்து கட்டுப்பாட்டில் மட்டுமே வைத்திருக்க முடியும், முழுமையான தீர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. சிகிச்சையால் பலவிதமாக பாதிக்கப்பட்டு வரும் சமந்தாவின் சகுந்தலம் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு அதன் ப்ரமோஷன் செய்திகளுக்காக பேட்டி அளித்த போது தான் சமந்தாவுக்கு நோய் எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பது தெரிய வந்தது.
இந்த வெப் சீரிஸின் இதற்காக தீவிரமான உடற்பயிற்சி செய்து வருகிறார் மற்றும் பயிற்சி செஷன்களிலும் கலந்து வருகிறார். ஆளையே உருக்குலையச் செய்யும் இந்த நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் சமந்தாவுக்கு தீவிரமான உடற்பயிற்சி மற்றும் சாகசம் இரண்டுமே அதிக பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே அதிலிருந்து விரைவாக ரிகவர் ஆக, ஐஸ் பாத் தெரபி எடுத்துள்ளார் சமந்தா.
தசை சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் சில ஆட்டோ இம்யூன் குறைபாடுகளுக்கு கட்டிகள் பயன்படுத்தி, உறைய வைக்கும் கிரையோ தெரபி, உள்ளிட்டவை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இதில் முழுக்க முழுக்க சில்லென்று தண்ணீர் குளித்தாலே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஜில்லென்ற தண்ணீரில் மூழ்கி இருப்பதும் ஒருவகையான தெரப்பியாகும். ஐஸ் பாத் அல்லது குளியல் தொட்டி அல்லது ஜில்லென்ற தண்ணீரில் 15 நிமிடங்கள் வரை அமர்ந்திருந்தால் சீக்கிரமாக உடல் ரிக்கவர் ஆகும் என்று கூறப்படுகிறது.