மாதவிடாய் நாட்களில் பெண்கள் படும் வேதனையை வார்த்தைகளால் கூற முடியாது. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியங்களை மற்றவர்களுக்கு சொல்லி மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியாது. அதிலும் ஏதாவது முக்கிய விசேஷ நாட்களில் மாதவிடாய் வந்துவிட்டால் மகிழ்ச்சியாக கலந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட நேரங்களில் மாதவிடாயை முன்கூட்டியே அல்லது பின்னால் தள்ளிப் போடவோ மாத்திரைகள், ஊசிகள் மூலம் தீர்வு பெறுகின்றனர். ஆனால் இயற்கையான வழியில் மாதவிடாய் முன்கூட்டியே வர என்ன செய்யலாம் என்பது குறித்து இங்கு காண்போம்.
பப்பாளி : பப்பாளி மாதவிடாய் முன்கூட்டியே வர மிகவும் அதிகம் பயன்படுத்தும் வீட்டு வைத்தியம் ஆகும். இதிலுள்ள கரோட்டீன் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை தூண்டி மாதவிடாய் வர வழி வகுக்கிறது. எனவே மாதவிடாய் சீக்கிரம் வர நினைப்பவர்கள் பப்பாளி சாப்பிடுங்கள். வயிற்றுக்குள் கருவே உருவாகி இருந்தாலும் அதையே கலைத்து வெளியேற்றும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்த ஒரு பழம் தான் பப்பாளி. மாதவிடாய் முன்கூட்டியே வர வேண்டும் என்று திட்டமிடுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக இருந்தே தினமும் ஒரு நன்கு கனிந்த பப்பாளி சாப்பிடுவது நல்லது. பப்பாளியை பச்சையாகவோ அல்லது பப்பாளி ஜூஸ்-ஆகவோ ஒரு நாளைக்கு இரண்டு முறை உட்கொள்ளலாம்.
இஞ்சி : இஞ்சி தேநீர் மிகவும் சக்திவாய்ந்த எமனகோக்கில் ஒன்றாகும் (மனநல ஓட்டத்தைத் தூண்டும் மூலிகை), மாதவிடாயை முன்னதாகவே வரவழைக்க இஞ்சி தேநீர் கலவை பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இஞ்சி கருப்பையைச் சுற்றியுள்ள வெப்பத்தை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. இஞ்சியை தேநீர் தயாரித்து அல்லது வெறும் இஞ்சி சாறு வடிவில் சிறிது தேனுடன் கலந்து சாப்பிடலாம். வழக்கமான தேதிக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு கப் இஞ்சி சாற்றை தண்ணீருர் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கவும்.
கொத்தமல்லி விதைகள் : கொத்தமல்லி விதைகள் உங்கள் மாதவிடாய் முன் கூட்டியே வர தூண்டுகிறது. ஏனெனில் இதிலுள்ள எமனகோக் பண்புகள் உங்கள் ஹார்மோன்களை தூண்டுகிறது. இதற்கு 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை எடுத்து 2 கப் தண்ணீரில் வேகவைக்கவும். 2 கப் தண்ணீர் ஒரு காப்பாக குறையும் வரை கொதிக்க வைத்து பின்னர் ஆறவைத்து குடிக்கவும். நீங்கள் மாதவிடாய் வர வேண்டும் என நினைக்கும் ஒரு வாரத்திற்கு முன்னர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என இந்த தண்ணீரை குடித்து வாருங்கள்.
வெந்தயம் : இரவில் ஒரு டம்ளரில் 3 டீ ஸ்பூன் வெந்தயத்தை போட்டு ஊற வைத்து விடுங்கள். பிறகு இந்த நீர் 2-3 நாட்களுக்கு முன் மாதவிடாய் வர உதவி செய்யும். வெந்தயம் உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியது தான். ஆனாலும் மாதவிடாயை தூண்டும் ஆற்றல் வெந்தயத்துக்கு உண்டு. தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவது நல்லது. சிலர் மோரில் கலந்து குடிப்பார்கள். அது உடலை அதிகமாகக் குளிர்ச்சியாக்கி விடும். அதனால் தண்ணீர் சிறந்தது. அப்படியே விழுங்க கஷ்டமாக இருந்தால், வெந்தயத்தை பொடி செய்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மாதுளை பழம் : மாதுளை பழச்சாறு மாதவிடாயை தூண்டுவதற்கு உதவியாக இருக்கும். உங்கள் வழக்கமான மாதவிடாய் தேதிக்கு குறைந்தது 10 முதல் 15 நாட்களுக்கு முன்னதாக ஒரு நாளைக்கு இரண்டு முறை மாதுளை சாற்றைக் குடிக்கத் தொடங்குங்கள். மாற்றாக, கரும்பு சாறுடன் மாதுளை சாற்றை சம அளவில் கலந்து ஒரு நாளைக்கு நான்கு முறை குடிக்கலாம்.