வெயில் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் நாம் வெளியே செல்வது நமக்கு பல விதமான உடல் நலப் பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்க்கும். குறிப்பாக ஓட்டப்பயிற்சி வீரர்களுக்கு பாதிப்புகள் சற்று அதிகமாக இருக்கும். வெயிலின் பாதிப்பால் ஓட்டப்பயிற்சி வீரர்கள் தங்களுடைய இலக்கை குறிப்பிட்ட நேரத்தில் அடைய முடியாமல் போகலாம். இருப்பினும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டால் நாம் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள முடியும்.
சூழலுக்கு தகுந்தாற்போல மாற்றிக் கொள்ளுதல் : குளிர்காலம் என்றாலும், கோடைகாலம் என்றாலும் சூழலுக்கு தகுந்தாற்போல உங்கள் உடல் தன்னை மாற்றிக் கொள்ளும். தொடக்கத்தில் உங்கள் இலக்குகளில் நீங்கள் சில சமரசங்களை செய்து கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், காலச்சூழலுக்கு ஏற்றாற்போல உடல் மாறிய பிறகு உங்கள் இலக்கை நீங்கள் அதிகரித்துக் கொள்ளலாம்.
தண்ணீர் அருந்துவது அவசியமானது : உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை இருக்கவே கூடாது. சூரிய வெப்பமானது உங்கள் உடலில் நீர்ச்சத்தை இழக்கச் செய்யும். ஓட்டப்பயிற்சி வீரர்கள் தங்கள் பயிற்சியின் போது அல்லது பயிற்சியின் நிறைவின்போது தண்ணீர் அருந்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும். ஆனால், பயிற்சிக்கு செல்வதற்கு முன்பாகவே போதுமான தண்ணீர் அருந்திவிட வேண்டும்.