முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சப்பாத்தி சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுமா..? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும்..?

சப்பாத்தி சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுமா..? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும்..?

சப்பாத்தி தேர்வு என்பது சரியானதுதான் என்றாலும் கோதுமையிலும் கார்போஹைட்ரேட் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. எனவே உங்கள் சப்பாத்தி தேர்வில் இனி கோதுமை அல்லாமல் அதற்கு மாற்று வழிக்களை தேடுங்கள்.

  • 16

    சப்பாத்தி சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுமா..? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும்..?

    உடல் எடையைக் குறைக்க பலரும் கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்த்துவிட்டு கலோரி குறைவான டயட்டிற்கு மாறுவார்கள். அப்படி பலரும் தேர்வு செய்யும் விஷயம் சப்பாத்தி. சப்பாத்தி தேர்வு என்பது சரியானதுதான் என்றாலும் கோதுமையிலும் கார்போஹைட்ரேட் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. எனவே உங்கள் சப்பாத்தி தேர்வில் இனி கோதுமை அல்லாமல் அதற்கு மாற்று வழிக்களை தேடுங்கள். உங்களுக்கான சில குறிப்புகள்.

    MORE
    GALLERIES

  • 26

    சப்பாத்தி சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுமா..? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும்..?

    கம்பு ரொட்டி : கம்பு தினை குளுடன் இல்லாத தானியமாகும். உங்கள் எடையை குறைக்க சிறந்த தேர்வாக இருக்கும். கம்பு ரொட்டியில் 97% கலோரிகள் மட்டுமே உள்ளன. மேலும் இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காது. வயிறு நிறைவாக இருக்கும். மேலும் இதில் நார்ச் சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருப்பதால், உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இதை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவும் மேம்படும். கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 36

    சப்பாத்தி சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுமா..? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும்..?

    கேழ்வரகு ரொட்டி : கேழ்வரகு சூப்பர் ஃபுட் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதோடு நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். கேழ்வரகில் உள்ள மெக்னீசியம் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. அதோடு உடல் பருமனைத் தடுக்கவும் உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது கால்சியமும் நிறைந்துள்ளதால் எலும்புகளுக்கு நல்லது.

    MORE
    GALLERIES

  • 46

    சப்பாத்தி சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுமா..? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும்..?

    கொண்டைக் கடலை மாவு மற்றும் தினை வகை ரொட்டி : கொண்டைக்கடலை அல்லது தினை வகை மாவு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. ஹெல்த்லைன் கூற்றுப் படி, கொண்டைக்கடலை மாவில் வெள்ளை மாவை விட 25 சதவிகிதம் குறைவான கலோரிகள் உள்ளன. எனவே இது எடையை குறைக்க உதவுகிறது. மேலும் இதில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    சப்பாத்தி சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுமா..? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும்..?

    கோதுமை தவிடு ரொட்டி : தவிடு என்பது கோதுமையின் வெளிப்புற ஓடு பகுதியாகும். வழக்கமான கோதுமை மாவுக்கு பதில் தவிடு சேர்ப்பது விரைவான எடை இழப்புக்கு உதவும். சப்பாத்தி மாவு பிசையும்போது இந்த கலவையை 2 : 1 என்ற விகிதத்தை சேர்க்கலாம். அதாவது, இரண்டு கப் தவிடு எனில் ஒரு கப் கோதுமை மாவு சேர்த்து பிசையலாம். தவிடு மாவில் செய்யப்பட்ட ரொட்டியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. கோதுமை தவிடு மலச்சிக்கலைத் தடுக்க உதவும் நார்ச்சத்துக்களை நிறைவாக கொண்டுள்ளன. இந்த மாவில் பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், செலினியம், மெக்னீசியம், வைட்டமின் ஈ மற்றும் பி காம்ப்ளக்ஸ் உள்ளன. எடையைக் குறைப்பது மட்டுமன்றி தவிடு மாவில் இருந்து தயாரிக்கப்படும் ரொட்டியை சாப்பிடுவது இதய நோய்கள், கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கும் உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 66

    சப்பாத்தி சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுமா..? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும்..?

    பார்லி மாவு ரொட்டி : எடையை குறைக்க, கோதுமைக்குப் பதிலாக பார்லி மாவு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த வகை மாவுக்கு, 10 கிலோ கொண்டைக்கடலை மாவு அல்லது கோதுமை மாவு மற்றும் 2 கிலோ பார்லி சேர்த்து அரைக்கவும். இந்த மாவில் இருந்து தயாரிக்கப்படும் ரொட்டிகளை சாப்பிடுவது உடல் எடையை விரைவாக குறைக்க உதவுகிறது. பார்லியில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.செரிமானம் , எடை இழப்பு ,கொலஸ்ட்ராலை குறைப்பது ஆரோக்கியமான இதயம் என பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

    MORE
    GALLERIES