உடற்பயிற்சி மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளில் நினைவாற்றல் மேம்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, மன அழுத்த குறைவு உள்ளிட்டவை முக்கியமானவை. தவிர உடற்பயிற்சி என்பது பலவிதமான நோய்களுக்கான அடிப்படை தீர்வாகும். நல்ல உடல் தகுதியை பராமரிக்க உதவுகிறது உள்ளிட்ட பல உடற்பயிற்சியின் நன்மைகளை மக்கள் நன்கு அறிந்திருந்தாலும், இந்த பழக்கம் பாலியல் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவும் என்பது பலருக்கு தெரியவில்லை. ஆம், நல்ல பாலியல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது.
உடற்பயிற்சி மூலம் ரத்த ஓட்டம் ஆரோக்கியமான நிலையில் இருப்பதால் உணர்ச்சி ஆரோக்கியம் பலம் பெறுகிறது. மேலும் வழக்கமான உடற்பயிற்சி உடல் நலன்கள் தவிர பாலியல் வாழ்க்கையை மேம்படுத்தும் மனநிலையை வழங்குகிறது. உடல் பருமன் மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக 43% பெண்களும் 31% ஆண்களும் பாலியல் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக தேசிய சுகாதார நிறுவனங்களின் புதிய ஆய்வு கூறுகிறது. தினசரி உடற்பயிற்சி உங்கள் பாலியல் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் நேர்மறை விளைவுகள்பற்றி இங்கே பார்க்கலாம்.
ரத்த ஓட்டம் அதிகரிக்கும் : உடற்பயிற்சியின் போது இதயம் ஹையர் ரேட்டில் துடிக்கிறது. மேலும் உடலில் ரத்த ஓட்டம் மேம்படும். இதன் காரணமாக ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவை குறைகிறது. இதன் விளைவாக பாலின உறுப்புகளுக்கு கிடைக்கும் ஆரோக்கியமான ரத்த ஓட்டம், ஒரு நபரின் பாலியல் ஆரோக்கியம் மேம்பட்டு, உச்சக்கட்ட பாலியல் அனுபவத்தை பெற உதவுகிறது.
மன அழுத்தம் குறையும் : உடல் செயல்பாடு 'மகிழ்ச்சி ஹார்மோன்கள்' எனப்படும் எண்டோர்பின்களை உருவாக்குகிறது. இவற்றின் பொறுப்பு வலியை தடுப்பது மற்றும் இன்பத்தை மேம்படுத்துவது. எனவே நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், அது உங்கள் செக்ஸ் வாழ்விலும் எதிரொலிக்கும். சுருக்கமாக, மன அழுத்தத்தைக் கையாளும் போது உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை வைத்து கொள்வது உங்கள் பாலியல் வாழ்க்கையையும் மேம்படுத்தும்.