முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » அதிக இரைச்சல் ஆண்மைக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும் - அதிர்ச்சி தரும் ஆய்வு..!

அதிக இரைச்சல் ஆண்மைக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும் - அதிர்ச்சி தரும் ஆய்வு..!

ஒலி மாசுபாடு என்பது உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் என்பது குறித்து ஏற்கனவே பலமான எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார ஆணையம், இது வளர்ந்து வரும் ஆபத்து என்று குறிப்பிட்டுள்ளது.

 • 19

  அதிக இரைச்சல் ஆண்மைக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும் - அதிர்ச்சி தரும் ஆய்வு..!

  சுற்றுச்சூழல் காரணிகள், புகைப்பழக்கம், அதிகப்படியான ஆல்கஹால் நுகர்வு, நோய்த்தொற்றுகள், உயர் ரத்த அழுத்தம், மனஅழுத்தம், துரித உணவுகள்,வாழ்க்கை முறை மாற்றங்கள், கதிர்வீச்சு தாக்கத்தை ஏற்படுத்தும் மொபைல் மற்றும் கணினியின் அளவுக்கு அதிகமான பயன்பாடு உட்பட பல எண்ணிலடங்கா நவீன மாற்றங்களால் இன்றைய தலைமுறையினருக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த பட்டியலில் தற்போது புதிய காரணம் ஒன்று சேர்ந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 29

  அதிக இரைச்சல் ஆண்மைக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும் - அதிர்ச்சி தரும் ஆய்வு..!

  மேற்சொன்ன காரணங்கள் மட்டுமின்றி இரைச்சல் மிக்க படுக்கையறை மாற்று சுற்றுப்புறங்கள் குறிப்பாக ஆண்களின் கருவுறுதல் பிரச்சனைகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. பொருளாதார காரணங்களுகுக்காக எப்போதும் பிஸியாக இருக்கும் பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கு பெரிய இரைச்சல் பழக்கப்பட்ட ஒன்றாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 39

  அதிக இரைச்சல் ஆண்மைக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும் - அதிர்ச்சி தரும் ஆய்வு..!

  அருகில் உள்ள தெருக்கள் அல்லது வீடுகளில் நடக்கும் தனிநபர் அல்லது தனியார் கட்டுமான பணிகள், மெட்ரோ நிலையம் உள்ளிட்ட அரசு செய்யும் கட்டுமான பணிகள் எவ்வளவு தொந்தரவு தந்தாலும் பிஸி சிட்டியில் வசிப்பவர்களின் தூக்கத்தை கெடுக்காது, அதிகம் எரிச்சல் அடைய செய்யாது. ஏனென்றால் அந்த இரைச்சல்களிலும் தூங்குவதற்கு அவர்கள் பழக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் இரைச்சல் நிறைந்த சுற்றுப்புறம் நிச்சயமாக கருவுறுதலை பாதிக்கும் என்று அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 49

  அதிக இரைச்சல் ஆண்மைக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும் - அதிர்ச்சி தரும் ஆய்வு..!

  சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, இரைச்சலுக்கு நடுவில் தூங்குவது ஆண்களுக்கு மலட்டுத்தன்மை அபாயத்தை அதிகரிக்கும் எனபது தெரிய வந்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் கருவுறுவதில் கோளாறு என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் பாதிக்கும் ஒரு நவீனகால சுகாதார பிரச்னையாக உருவெடுத்துள்ளது. நாட்டிலுள்ள சுமார் 15% தம்பதிகள் கருவுறுதல் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 59

  அதிக இரைச்சல் ஆண்மைக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும் - அதிர்ச்சி தரும் ஆய்வு..!

  ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் : ஒலி மாசுபாடு என்பது உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் என்பது குறித்து ஏற்கனவே பலமான எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார ஆணையம், இது வளர்ந்து வரும் ஆபத்து என்று குறிப்பிட்டுள்ளது. காற்று மாசுபாட்டிற்குப் பின் இரண்டாவது மிக ஆபத்தானது ஒலி மாசுபாடு. மாரடைப்பு, டின்னிடஸ், பக்கவாதம், கருச்சிதைவு மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுடன் முன்பே ஒலிமாசு சம்பந்தப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போதைய புதிய ஆய்வு ஆண்களுக்கு மலட்டு தன்மையை அதிகரிக்கும் என்று கூறி உள்ளது.

  MORE
  GALLERIES

 • 69

  அதிக இரைச்சல் ஆண்மைக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும் - அதிர்ச்சி தரும் ஆய்வு..!

  ஆய்வின் விவரம் : தென் கொரியாவில் நான்கு ஆண்டுகளாக 55 டெசிபல்களுக்கு மேலான ஒலியை குறிப்பாக இரவில் தொடர்ந்து கேட்டு வந்த திருமணமான ஆண்களின் தரவு இந்த ஆய்விற்கு பயன்படுத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் இந்த ஒலி மாசு ஆண்களில் கருவுறாமை அபாயத்தை அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் போது, ஆராய்ச்சியாளர்கள் ஆண்களின் போஸ்டல் கோட்களுடன் இணைத்து, அந்நாட்டு தேசிய ஒலி தகவல் அமைப்பின் தகவல்களைப் பயன்படுத்தி சத்தம் வெளிப்படும் அளவைக் கணக்கிட்டனர். 2006-2013 முதல் மேற்கொள்ளப்பட்ட 8 ஆண்டு ஆய்வில், 3,293 பேருக்கு கருவுறுதல் பிரச்சனைகள் இருந்தன.

  MORE
  GALLERIES

 • 79

  அதிக இரைச்சல் ஆண்மைக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும் - அதிர்ச்சி தரும் ஆய்வு..!

  ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, 55 டெசிபல்களுக்கு மேல் உள்ள ஒவ்வொரு 10 டெசிபல் சத்தமும் ஆண்களுக்கான கருவுறாமை அபாயத்தை அதிகரிக்கும் என்பது தெரிய வந்துள்ளது. தவிர பணியிட ஒலி மாசுபாடு இதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது என்று சுட்டி காட்டப்பட்டுள்ளது. இதே போல எலிகளை வைத்து செய்யப்பட்ட ஒலி மாசு தொடர்பான சோதனையில் ஆண் எலிகளின் கருவுறுதலில் பிரச்னை ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 89

  அதிக இரைச்சல் ஆண்மைக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும் - அதிர்ச்சி தரும் ஆய்வு..!

  ஆனால் குறிப்பாக இரவு நேர அதிக சத்தம் ஆண்களுக்கு ஏன் மலட்டுத்தன்மையை அதிகரிக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்களால் கூற முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் முன்பே இருக்கும் தரவை ஆராய்ச்சிக்காக பயன்படுத்தினர். மக்களுடன் நேருக்கு நேர் நேர்காணல் நடத்த அனுமதிக்கப்படவில்லை. எனினும் விலங்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையின்படி, ஒலி மாசானது டெஸ்டோஸ்டிரோன் அளவை குறைக்கிறது, டெஸ்டிகுலர் திசுக்களில் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்பட வழிவகுக்கும் என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும் இன்னும் கூடுதல் ஆராய்ச்சி தேவை என கருதப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 99

  அதிக இரைச்சல் ஆண்மைக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும் - அதிர்ச்சி தரும் ஆய்வு..!

  தம்பதியர் என்ன செய்யலாம்.? : இரைச்சல் சுற்றுப்புறத்தில் வாழும் குழந்தை பெற்று கொள்ளும் முயற்சியில் உள்ள தம்பதியர், நாய்ஸ் கேன்சலேஷன் ஹெட்ஃபோன்களை பயன்படுத்தலாம். வெளியில் இருந்து வரும் சத்தத்தை குறைக்க வீட்டில் கனமான ஸ்கிரீன்களை தொங்க விடலாம். ஜன்னல்களுக்கு அருகில் படுப்பதை தவிர்க்கலாம். இரவு நேரங்களில் வீட்டில் உள்ள அனைத்து மின்னணு சாதனங்களையும் அணைத்து வைக்கலாம்.

  MORE
  GALLERIES