பெண்கள் பொதுவான மருத்துவப் பரிசோதனைகளை செய்துகொண்டாலே வயதானபோது வரும் உடல்நலப் பிரச்னைகளை சரி செய்துவிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால் பெண்கள் பெரும்பாலும் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துவதே இல்லை என்கின்றனர். ஆனால் அவ்வாறு விடுவதால் தீவிரப் பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர். எனவே பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணமாக்கிவிடலாம் என்கின்றனர். அது கேன்சராகவே இருந்தாலும் சரி செய்யலாம் என இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு மகப்பேறு மருத்துவர் மனிஷா ராஜன் கூறியுள்ளார்.

அதோடு உடல்நலத்தில் அக்கறை செலுத்தாததால் 38 சதவீதம் பெண்கள் தொடர் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அப்படி பாதிக்கப்படும் பெண்களுக்கு இந்தப் பிரச்னைகளை சமாளிக்க ஆண்களைக் காட்டிலும் அதிக அளவில் போராடுகின்றனர். எனவே ஆரம்பத்திலேயே மருத்துவப் பரிசோதனைகள் அவசியம் என்கிறார். அப்படி வயது அடிப்படையில் எப்போது என்ன பரிசோதனை செய்ய வேண்டும் என்பதையும் பரிந்துரைக்கிறார். அவை என்னென்ன பார்க்கலாம்.

11- 12 வயது கொண்ட பெண்கள் : மனித பாபில்லோமா வைரஸ் ( Human papillomavirus(HPV)) பெண்களை பாதிக்கும் வைரஸாக உள்ளது. இது கர்ப்பப்பை வாய் புற்றுநோயை உண்டாக்கும். HPV வைரஸானது இனப்பெருக்கப் பாதையில் தொற்றை உருவாக்குகிறது. இது எதிர்காலத்தில் உடலுறவில் ஈடுபடும்போது இன்னும் தீவிர பாதிப்பை உண்டாக்கும். ஆனால் இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சில மாதங்களிலேயே சரி செய்துவிடலாம் என்கின்றார். சில பாதிப்புகள் 2 மாதத்திலேயே 90 % பூரண குணமாகும் என்கிறார்.

20 வயது பெண்கள் : வருடத்திற்கு ஒரு முறை மகப்பேறு மருத்துவரிடம் முழு பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்கிறார். வெஜினா அல்லத்ய் அடிவயிற்றில் திடீர் வலி, இரத்தக் கசிவு , கருப்பையிலிருந்து இரத்தக் கசிவு என இருந்தால் உடனே மகப்பேறு மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவது நல்லது. இதனால் ஆரம்பத்திலேயே அதன் பிரச்னையை கண்டறிந்து சரி செய்ய முடியும்.

21-29 வயது பெண்கள் : நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் 21 - 65 வயது கொண்ட பெண்கள் கட்டாயம் Pap smears tests செய்துகொள்வது நல்லது என்கின்றனர். இதனால் கருப்பை புற்றூநோய் அல்லது பெண்களை தாக்கும் மற்ற எந்த பிரச்னைகளையும் தவிர்க்க முடியும் என்கிறார்.

30 வயது பெண்கள் : 30 வயது நிறைந்த பெண்கள் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை கட்டாயம் Pap smears tests செய்துகொள்ள வேண்டும் என்கிறார்.

40 வயது பெண்கள் : 40 வயதை நெருங்கும் அல்லது 40 ஐ கடக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் உண்டாவது அதிகரித்துவிட்டது. எனவே இந்த சமயத்தில் மார்பகப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. ஆரம்பத்திலேயே இதைக் கண்டறிந்தால் சரி செய்யலாம் என்கின்றனர். எனவே பரிசோதனைக்குச் செல்லும் முன் எந்தவித வாசனை திரவியங்களையும் பயன்படுத்தக் கூடாது.

40 - 45 வயது பெண்கள் : குடல் புற்றுநோய் பரிசோதனை இந்த வயதில் அவசியம் என்கின்றனர். இந்த வயதில்தான் அதிக உதிரப்போக்கு, மலச்சிக்கல் அல்லது இரத்தக் கசிவு போன்றவை உண்டாகுமாம். இது குடல் புற்றோய்க்கான ஆரம்ப அறிகுறி. எனவே 50 வயதை நெருங்கும் பெண்கள் கடாயம் பரிசோதனை செய்து ஆரம்பத்திலேயே சரி செய்வது நல்லது.

65 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் : இந்த வயதில் எலும்புகள் பாதிக்கப்படும். எனவே பெண்கள் இந்த சமயத்தில் மருத்துவரின் பரிந்துரையில் கால்சியம் மாத்திரைகளை உட்கொள்ளலாம். உணவுக் கட்டுப்பாடு அவசியம். நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், மலச்சிக்கல், பலவீனமான எலும்புகள், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு ஆளாகின்றன.