இன்று பெரும்பாலான மாரடைப்பு மற்றும் பக்கவாத பிரச்சனைகளுக்கு கொலஸ்ட்ரால் முக்கிய காரணியாக இருப்பதற்கு அதன் அறிகுறியற்ற தன்மையே காரணம். ஆம்.. கொலஸ்ட்ரால் உடலில் அதிகரிக்கிறது எனில் அது ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளையும் காட்டாது. தீவிர நிலையை அடைந்த பின்னே அறிகுறிகளை காட்டத்தொடங்குகிறது. எனவேதான் கொலஸ்ட்ராலால் உண்டாகக் கூடிய பிற நோய்கள் அதிகரிக்கின்றன.
எனவே தினமும் 46 கிராம் திராட்சையை உட்கொண்டால் தேவையற்ற கெட்ட கொழுப்பை கரைக்கலாம் என்கிறது. அப்படி இந்த ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு மூன்று கப் திராட்சை 8 வாரங்களுக்கு தினமும் கொடுத்ததில் கணிசமான அளவில் கொழுப்பு குறைந்திருந்தது தெரிய வந்துள்ளது. எனவே கொழுப்பை கரைக்க திராட்சையை ஸ்நாக்ஸ் போல் கூட சாப்பிட்டு எளிதாக குறைக்கலாம் என பரிந்துரைக்கிறது.