முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இன்னும் நீங்கள் கர்ப்பமாகாமல் இருக்க என்ன காரணமாக இருக்கும்..?

இன்னும் நீங்கள் கர்ப்பமாகாமல் இருக்க என்ன காரணமாக இருக்கும்..?

குறிப்பாக பெண்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தில் பலவித சிக்கல்களை இந்த வாழ்வியல் மாற்றங்கள் உண்டாக்குகின்றன. இது ஒருபுறம் இருக்க, மரபு ரீதியான சில சிக்கல்களும் பெண்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

  • 17

    இன்னும் நீங்கள் கர்ப்பமாகாமல் இருக்க என்ன காரணமாக இருக்கும்..?

    இன்றைய வாழ்வியல் சூழல்கள் நமக்கு பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. பல பெண்கள் இதனால் கர்பமாவதற்கு கூட பிரச்சனைகள் உண்டாகுகிறது. பொதுவாக பெண்களுக்கு பாலுறவு நோய்களின் வரலாறு மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் ஃபலோபியன் குழாய்களில் அடைப்பு ஆகிய காரணங்களால் கர்ப்பமாவதில் சிக்கல்கள் ஏற்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 27

    இன்னும் நீங்கள் கர்ப்பமாகாமல் இருக்க என்ன காரணமாக இருக்கும்..?

    இதனால் விந்தணுக்கள் கருமுட்டையை அடைய முடியாது போகிறது. இதன் காரணமாக குழந்தையின்மை பாதிப்பு ஏற்படுகிறது. ஃபலோபியன் குழாயில் ஏற்பட்டுள்ள இந்த குறைபாட்டை முறையான மருத்துவ பரிசோதனை மூலம் மட்டுமே கண்டறிய முடியும். இதே போன்று என்னென்ன காரணங்களால் பெண்கள் கர்ப்பமாகாமல் போகிறார்கள் என்பதை பற்றி இனி பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 37

    இன்னும் நீங்கள் கர்ப்பமாகாமல் இருக்க என்ன காரணமாக இருக்கும்..?

    கருப்பையில் பாதிப்பு : கருப்பையில் உண்டாக கூடிய கட்டிகள், உட்புற குறைபாடுகளை தருகின்றன. இவை கருப்பையின் சுவர்களில் உள்ள புற்றுநோய் அல்லாத வளர்ச்சிகள் கருவுற்ற முட்டை கருப்பை சுவருடன் இணைவதை கடினமாக்குகிறது. இது தவிர எண்டோமெட்ரியல் பாலிப்கள் அல்லது அசாதாரண கருப்பை வடிவம் போன்ற பிற நிலைமைகளும் கர்ப்பமாவதில் வாய்ப்புகளை குறைக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 47

    இன்னும் நீங்கள் கர்ப்பமாகாமல் இருக்க என்ன காரணமாக இருக்கும்..?

    வெரிகோசெல்ஸ்  : இந்த பாதிப்பு நிலை ஆண்களுக்கு பொதுவாக இருக்கும். விதைப்பையில் உள்ள நரம்புகள் தடுக்கப்பட்டு, விதைப்பையில் வெப்பநிலை அதிகரிக்கும். அதிக வெப்பநிலை காரணமாக விந்தணுக்கள் வளர்ச்சி பெற இயலாது. ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைவதற்கு வெரிகோசெல்ஸ் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. எனவே, இது தாம்பத்திய வாழ்வில் குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது.

    MORE
    GALLERIES

  • 57

    இன்னும் நீங்கள் கர்ப்பமாகாமல் இருக்க என்ன காரணமாக இருக்கும்..?

    அஸோஸ்பெர்மியா  : இது மிகவும் அரிதான நிலையாக மருத்துவர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் இருக்கும் ஆண்களின் விந்துவில் விந்தணுக்கள் இருப்பதில்லை. இதனால், விந்தணுக்களுக்குள் கருமுட்டை நுழைவதை தடுக்கும் தடையாக இருக்கலாம். மேலும், விந்தணு உற்பத்தி குறையும் பாதிப்பையும் இது தருகிறது.

    MORE
    GALLERIES

  • 67

    இன்னும் நீங்கள் கர்ப்பமாகாமல் இருக்க என்ன காரணமாக இருக்கும்..?

    அசாதாரண ஓவலேஷன்  : பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) என்பது இன்று பல பெண்களுக்கும் இருக்க கூடிய பாதிப்பாக உள்ளது. மன அழுத்தம் மற்றும் அதிக அல்லது குறைந்த உடல் எடை போன்ற பல மருத்துவ நிலைகள் ஒரு பெண்ணின் அண்டவிடுப்பை (ஓவலேஷன்) பாதிக்கிறது. இந்த நிலைமைகளால் பெண்களுக்கு தொடர்ந்து கருமுட்டை வெளிப்படுவதில்லை. இது கர்பமாவதன் வாய்ப்புகளை குறைக்கிறது.

    MORE
    GALLERIES

  • 77

    இன்னும் நீங்கள் கர்ப்பமாகாமல் இருக்க என்ன காரணமாக இருக்கும்..?

    வாழ்க்கை முறை காரணிகள்  : தூக்கமின்மை, மன அழுத்தம், வயது, அதிக எடை மற்றும் குறைந்த எடை ஆகியவை கர்ப்பமாவதற்கான வாய்ப்பைக் குறைக்கின்றன. மேலும், தாமதமாக தூங்குதல், மது அருந்துதல், ஜங்க் உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற தவறான வாழ்க்கை முறை பழக்கங்கள் நீண்ட காலத்திற்கு பிறகு மனித உடலின் அடிப்படை உயிரியல் செயல்பாடுகளை பாதிக்கிறது.இதனால் நீரிழிவு, சிறுநீரக நோய்கள் போன்ற பாதிப்புகள் உண்டாகி பலருக்கு கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளையும் பாதிக்கிறது. மேலும், அறுவை சிகிச்சை போன்ற மருத்துவ சிகிச்சைகளும் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றன.

    MORE
    GALLERIES