தூக்க சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள் முதல் மன அழுத்தம் வரை மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும் பல காரணிகள் உள்ளன. கர்ப்பமாக இருப்பது மாதவிடாய் தவறியதற்கான ஒரு முக்கியமான காரணமாக இருந்தாலும் கூட பெண்களின் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும் பிற காரணிகளும் இங்கே உள்ளன. பொதுவான காரணங்கள் - ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் முதல் தீவிர மருத்துவ நிலைகள் வரை செல்கிறது.
உங்கள் உடல் மாற்றங்களை கடந்து செல்லும் போது, அது உங்களின் மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்றதாக மாற்றுகிறது. ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி ஆனது ஒவ்வொரு 21 முதல் 40 நாட்களுக்கும் இருக்கலாம். இந்த காலகட்டத்திற்கு மேல் உங்களின் மாதவிடாய் தாமதமாகிவிட்டால், அது சில 'மெடிக்கல் கண்டிஷன்களின்' அறிகுறியாக இருக்கலாம். அதை பற்றிய தெளிவை பெற, அதாவது தாமதமான அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்தும் சில காரணங்களை பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்.
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்): பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) என்பது 'மேல் ஹார்மோன்' ஆன ஆண்ட்ரோஜன் உங்கள் உடலில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் நிலையாகும். இந்த ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக, கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகின்றன, இது மாதவிடாயை ஒழுங்கற்றதாக மாற்றும். இதை சரிசெய்ய உங்கள் சுழற்சியைக் கட்டுப்படுத்த உதவும் சரியான மருந்தை பரிந்துரைக்கும் உங்கள் மருத்துவரை அணுகவும்.
உடல் எடையில் ஏற்ற இறக்கங்கள்: உங்கள் உடல் எடை குறைவாக இருந்தாலும் சரி அல்லது அதிகமாக இருந்தாலும் சரி, உடல் எடையில் ஏற்படும் மாற்றம் உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கலாம். உணவுக் கோளாறுகள் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள், எடையில் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்துகின்றன, பெரும்பாலும் இந்த இரண்டும் தான் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு வழிவகுக்கும். இதை நீங்கள் எதிர்கொண்டால் நீங்கள் ஒரு மருத்துவரை அணுகுவது பற்றி சிந்திக்க வேண்டும்.