முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » பெண்களுக்கு மார்பகத்தில் உண்டாகும் குத்தல் போன்ற வலி.. காரணம் இதுதான்!

பெண்களுக்கு மார்பகத்தில் உண்டாகும் குத்தல் போன்ற வலி.. காரணம் இதுதான்!

வலி ஏற்படும் சமயத்தில் மார்பகத்தில் இருந்து பால் அல்லது ரத்தக் கசிவு தென்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். மேலும் மேமோகிராஃபி அல்லது சோனோகிராஃபி போன்ற பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்

  • 17

    பெண்களுக்கு மார்பகத்தில் உண்டாகும் குத்தல் போன்ற வலி.. காரணம் இதுதான்!

    நெஞ்சுவலி போல அல்லாமல் பெண்களுக்கு இடது மார்பக பகுதியில் மட்டும் சுருக்கென்று குத்துவதை போல வலி ஏற்படும். அத்துடன் மார்பக பகுதி கனத்ததைப் போல தோன்றும். இப்படியொரு வலி எதனால் ஏற்படுகிறது? இதற்கும் இதய நலனுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்று நீங்கள் குழப்பம் அடையக் கூடும்.

    MORE
    GALLERIES

  • 27

    பெண்களுக்கு மார்பகத்தில் உண்டாகும் குத்தல் போன்ற வலி.. காரணம் இதுதான்!

    அதிலும் மார்பு பகுதியில் வலி ஏற்படுவதால் இது சாதாரணமானது என்று கருதி அலட்சியம் செய்துவிட முடியாது. ஆக, என்னென்ன காரணங்களால் இதுபோல மார்பக பகுதியில் வலி ஏற்படக் கூடும் என்பதை நாம் பரிசீலனை செய்து பார்க்க வேண்டியுள்ளது. பெரும்பாலும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக இத்தகைய வலி ஏற்படலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மகப்பேறு மருத்துவர் சுஷ்மா தோமர் கூறுகையில், “மார்பக பகுதியில் வலி ஏற்படும் சமயத்தில் மருத்துவ பரிசோதனையை பெண்கள் மேற்கொள்ள வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 37

    பெண்களுக்கு மார்பகத்தில் உண்டாகும் குத்தல் போன்ற வலி.. காரணம் இதுதான்!

    மார்பகங்கள் எப்போதும் போல இலகுவானதாக உள்ளதா அல்லது கட்டி ஏதேனும் உருவாகியுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய வலி ஏற்படும் சமயத்தில் மார்பகத்தில் இருந்து பால் அல்லது ரத்தக் கசிவு தென்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். மேலும் மேமோகிராஃபி அல்லது சோனோகிராஃபி போன்ற பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

    MORE
    GALLERIES

  • 47

    பெண்களுக்கு மார்பகத்தில் உண்டாகும் குத்தல் போன்ற வலி.. காரணம் இதுதான்!

    இதயநோய் சிகிச்சை நிபுணரின் கருத்து என்ன? இடதுபக்க மார்பகத்தில் வலி ஏற்பட்ட உடனே அது இதயநலன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று பலரும் கவலை அடைகின்றனர். ஆனால், எப்போதுமே இதுதான் காரணம் என்றில்லை. உண்மையை சொல்வதென்றால், இடது பக்க மார்பக வலிக்கும், இதயநலனுக்கும் தொடர்பு கிடையாது. சில சமயம் தசைப்பிடிப்பு அல்லது ஆசிட் ரிஃப்ளெக்ஸ் போன்றவை காரணமாக மார்பக வலி ஏற்படலாம்.

    MORE
    GALLERIES

  • 57

    பெண்களுக்கு மார்பகத்தில் உண்டாகும் குத்தல் போன்ற வலி.. காரணம் இதுதான்!

    இதுகுறித்து இதய நோய் சிகிச்சை நிபுணர் ரவிகாந்த் கூறுகையில், “மார்பக பகுதியில் அல்லது மேல் முதுகு பகுதியில் தசைகல் அழுத்தப்படுவதன் காரணமாக ஏற்படுகின்ற வலி இடது பக்க மார்பகம் வரையிலும் பரவலாம். மார்பக எலும்புகளையும், விழா எலும்புகளையும் இணைக்கக் கூடிய குருத்தெலும்புகளில் ஏற்படக் கூடிய அழற்சியின் காரணமாகவும் குத்துதல் போன்ற வலி ஏற்படும்’’ என்று தெரிவித்தார்.

    MORE
    GALLERIES

  • 67

    பெண்களுக்கு மார்பகத்தில் உண்டாகும் குத்தல் போன்ற வலி.. காரணம் இதுதான்!

    பிற காரணங்கள் : வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காரணமாகவும் இடதுபக்க மார்பகத்தில் வலி ஏற்படக் கூடும். ஆசிட் ரிஃப்ளெக்ஸ் பிரச்சினை காரணமாக இடது மார்பக பகுதியில் எரிச்சல் உணர்வு ஏற்படலாம். சில சமயம் வாயு, வயிறு உப்புசம் போன்ற செரிமானக் கோளாறுகள் காரணமாகவும் இடது மார்பக பகுதியில் வலி ஏற்படுவது உண்டு.

    MORE
    GALLERIES

  • 77

    பெண்களுக்கு மார்பகத்தில் உண்டாகும் குத்தல் போன்ற வலி.. காரணம் இதுதான்!

    நுரையீரலில் ரத்தம் கட்டுவது மற்றும் நிமோனியா போன்ற காரணங்களால் இடதுபக்க மார்பகத்தில் அசௌகரியம் ஏற்படலாம். மார்பக பகுதியில் சுருக்கென்று வலி வந்தால் அதுகுறித்து மருத்துவரிடம் ஆலோசனை செய்து உரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

    MORE
    GALLERIES