நீங்கள் அடிக்கடி கனவு காண்பீர்களா? கிட்டத்தட்ட ஒவ்வொரு பொழுதின் தூக்கத்திலும் நீங்கள் கனவுலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறீர்களா? யாருமில்லாத வெற்று நடைபாதையில் யாரென்றே தெரியாத ஒரு சக்தியால், உருவத்தால் துரத்தப்பட்டு ஓடிக்கொண்டு இருக்கிறீர்களா? அல்லது நீங்கள் நேரில் சந்திக்க விரும்பிய ஆனால் சந்திக்க முடியாத நபர்களுடன் அமர்ந்து உரையாடிக்கொண்டு இருக்கீர்களா? இப்படி கனவுகள் பல்வேறு வடிவங்களில் வருகின்றன.
சில கனவுகள் நம்மை சிறு புன்னகையோடு எழ வைக்கின்றன, சில கனவுகள் திகிலூட்டி, அச்சுறுத்தி தூக்கத்தை துரதியடித்து நம்மை தூக்கத்தில் இருந்து எழுப்புகின்றன. இருப்பினும், வாழ்க்கையில் ஒரு முறையாவது நீங்கள் ஒரு சுய கேள்வியை எழுப்பியிருப்பீர்கள் - "இந்த கனவுகள் நமக்கு என்ன சொல்ல விரும்புகின்றன?". இதற்கான பதில்களை தேடும் போது, நமது கனவுகளை புரிந்து கொள்ள எந்த வகையான அறிவியல் செயல்முறையும் இல்லாமல், நாம் வெறும் ஊகங்களுடன் குறிப்பிட்ட கேள்வியை கைவிடுகிறோம். மேலும் நம் கனவுகளை அடிக்கடி மறந்தும் விடுகிறோம்.
தி இன்டர்பிரட்டேஷன் ஃஆப் ட்ரீம்ஸ்' - சிக்மண்ட் பிராய்ட்: பிராய்டின் மிக முக்கியமான இந்த படைப்பு, கனவு சார்ந்த விளக்கங்கள் மூலம் வாசகர்களின் மனதிலுள்ள குழப்பங்களின் மீது வெளிச்சம் பாய்ச்ச முயற்சிக்கிறது. சாதாரண நிகழ்வுகள் கனவுகளில் எவ்வாறு காட்சியளிக்கின்றன என்பதை விளக்கும் குறியீடுகள் தான் இந்த புத்தகத்தின் ஹைலேட்டே!
சைக்காலஜி ஃஆப் தி அன்கான்ஸியஸ் - கார்ல் ஜங்: கார்ல் ஜங்கின் மிகவும் பிரபலமான மற்றும் செல்வாக்குமிக்க இந்த படைப்பானது, கனவுகளை மனநோயியல் மற்றும் அதன் அறிகுறிகளுடன் ஒப்பிட்டு பார்க்காமல், கனவுகள், புராணங்கள் மற்றும் இலக்கியங்களை யுனிவர்சல் சைக்கி பேட்டர்ன்களாக (Universal psyche patterns) பார்க்கிறார்.
‘ஸ்லீப்பிங், ட்ரீமிங் அன்ட் டையிங் - 14வது தலாய் லாமா: இந்த புத்தகம், புகழ்பெற்ற மேற்கத்திய விஞ்ஞானிகளான டாக்டர். ஜாய்ஸ் மக்டூகல், டாக்டர். ஜெரோம் ஏங்கல் மற்றும் பலருடனான தலாய் லாமாவின் உரையாடல்களை விவரிக்கிறது. மேலும் இந்த புத்தகம் தூக்க நரம்பியல் முதல் ஸ்லீப்பிங் யோகா வரை பல தலைப்புகளை பற்றி பேசுகிறது. இது படிப்பவரை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.