இஸ்லாமிய நாட்காட்டியில் மிகவும் புனிதமான மாதங்களில் ஒன்றான ரமலான் இனிதே தொடங்கியது. இம்மாதம் முழுவதும் இஸ்லாமிய சகோதர, சகோதிரிகள் நோன்பை கடைபிடிப்பார்கள். இது இறைவனுடனான ஒரு ஆன்மீக இணைப்பிற்காக மட்டும் நிகழ்த்தப்படும் நோன்பு அல்ல; ஒருவர் தன் முழு உடலையும் டீடாக்ஸ் (detox) செய்வதற்கான ஒரு வழியும் ஆகும்.
டிப்ஸ் 1 : நோன்பு காலத்தில் நீங்கள் எப்போதும் ஹைட்ரேடட்டாக இருப்பது மிகவும் அவசியம். எனவே தினமும் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீரைக் குடிக்கவும். இங்கே முக்கியமான 'டிப்' என்னவென்றால், ஃபஜ்ர் (Fajr) பிராத்தனைக்கு முன் அரை மணி நேரத்திற்கு முன்னதாக செஹ்ரி (விடியற்கலையில் உண்ணும் உணவு) சாப்பிட வேண்டும், ஆக இடையில் தண்ணீர் குடிக்க குறைந்தது 30 நிமிடங்கள் கிடைக்கும். நீரை படிப்படியாக பருகவும், ஒரே நேரத்தில் முழுவதுமாக குடித்துவிட வேண்டாம். முடிந்தவரை தேநீர் மற்றும் காபியைத் தவிர்க்கவும், ஏனெனில் அவைகள் உங்களின் சீரான உடல் வெப்பநிலையை குறைக்கும்.
டிப்ஸ் 3 : நாள் முழுவதும் நோன்பை கடைபிடித்த பிறகு, உங்களுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளை உட்கொள்வதை தவிர்ப்பது மிகவும் கடினம். அதேசமயம் நீங்கள் அடுத்த நாளும் நோன்பை கடைபிடிக்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம். எனவே இஃப்தார் உணவின் போது என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்கிற சுய கண்காணிப்பும் அவசியம்.
இதுதவிர்த்து உப்பு, காரமான மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்ப்பது ரமலான் நோன்பை கடைப்பிடிக்கும் ஒவ்வொரு நபருக்கும் பொதுவான டிப்ஸ் ஆகும். இந்த எளிய மற்றும் முக்கியமான விஷயங்களை பின்பற்றுவதன் மூலம், ரமலான் காலத்தில் ஒவ்வொருவரும் மிகவும் ஆரோக்கியமாகவும் மற்றும் மிகவும் பாதுகாப்பாகவும் இருக்க முடியும்.