முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சத்தமே இல்லாமல் ஆண்களை தாக்கும் ’புரோஸ்டேட் புற்றுநோய் ‘.. அறிகுறிகளை எப்படி கண்டறிவது..?

சத்தமே இல்லாமல் ஆண்களை தாக்கும் ’புரோஸ்டேட் புற்றுநோய் ‘.. அறிகுறிகளை எப்படி கண்டறிவது..?

ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் விந்துவில் ரத்தம் வெளியேறுதல், சிறுநீர் கழித்த பின்னரும், மீண்டும் சிறுநீர் வருகின்ற உணர்வு, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு போன்றவை இந்நோயின் அறிகுறிகளாக உள்ளன..

 • 18

  சத்தமே இல்லாமல் ஆண்களை தாக்கும் ’புரோஸ்டேட் புற்றுநோய் ‘.. அறிகுறிகளை எப்படி கண்டறிவது..?

  மருத்துவ உலகில் புற்றுநோய் என்பது ஓர் உயிர்க்கொல்லி நோயாகும். அதிலும் ஆண்களை மட்டும் பாதிக்கக்கூடிய புரோஸ்டேட் புற்றுநோயை கண்டறிவது என்பது அவ்வளவு எளிதல்ல. இதனால் தான் இந்த புற்றுநோய் பாதிப்பை Silnet killer என்கின்றனர் மருத்துவர்கள்.

  MORE
  GALLERIES

 • 28

  சத்தமே இல்லாமல் ஆண்களை தாக்கும் ’புரோஸ்டேட் புற்றுநோய் ‘.. அறிகுறிகளை எப்படி கண்டறிவது..?

  “புரோஸ்டேட் என்பது ஆண்களில் சிறுநீர்ப்பைக்குக் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய வால்நட் வடிவ சுரப்பியாகும். இந்த சுரப்பியானது விந்தணுக்களுக்கு ஊட்டமளிக்கும் மற்றும் கடத்தும் விந்து திரவத்தை உற்பத்தி செய்கிறது. இவற்றின் செயல்பாடுகள் முறையாக நடைபெறாத போது தான் புற்றுநோயின் பாதிப்பு ஆரம்பமாகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

  MORE
  GALLERIES

 • 38

  சத்தமே இல்லாமல் ஆண்களை தாக்கும் ’புரோஸ்டேட் புற்றுநோய் ‘.. அறிகுறிகளை எப்படி கண்டறிவது..?

  குறிப்பாக உலகளவில் ஏழு ஆண்களில் ஒருவர் இந்த புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார் எனவும் ஆண்களிடையே அடிக்கடி ஏற்படும் புற்றுநோயாக இது இரண்டாவது இடத்தில் உள்ளது என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

  MORE
  GALLERIES

 • 48

  சத்தமே இல்லாமல் ஆண்களை தாக்கும் ’புரோஸ்டேட் புற்றுநோய் ‘.. அறிகுறிகளை எப்படி கண்டறிவது..?

  எந்த வயதினருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்? மருத்துவர்களின் கூற்றுப்படி, ஆண்களுக்கு 50 வயதிற்குப் பிறகு புரோஸ்டேட் சுரப்பியின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது மற்றும் அதன் வழியாக செல்லும் சிறுநீர்க்குழாய் மீது அழுத்தம் ஏற்படலாம். வயதானவர்களால் இந்த வழக்கமான அறிகுறிகள் மாற்றம் ஏற்படும் போது உங்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாகிறது.

  MORE
  GALLERIES

 • 58

  சத்தமே இல்லாமல் ஆண்களை தாக்கும் ’புரோஸ்டேட் புற்றுநோய் ‘.. அறிகுறிகளை எப்படி கண்டறிவது..?

  புற்றுநோயின் அறிகுறிகள்: ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் விந்துவில் ரத்தம் வெளியேறுதல், சிறுநீர் கழித்த பின்னரும், மீண்டும் சிறுநீர் வருகின்ற உணர்வு, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு போன்றவை இந்நோயின் அறிகுறிகளாக உள்ளனர். இதோடு மட்டுமின்றி எடை இழப்பு, வயிற்றுவலி, எலும்பு வலி, கால் வீக்கம் மற்றும் சோர்வு போன்றவையும் இந்த புரோஸ்டெட் புற்றுநோயின் அறிகுறிகளாக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 68

  சத்தமே இல்லாமல் ஆண்களை தாக்கும் ’புரோஸ்டேட் புற்றுநோய் ‘.. அறிகுறிகளை எப்படி கண்டறிவது..?

  சிகிச்சை முறை: ஆண்களுக்கு இடையே ஏற்படும் புற்றுநோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிவது என்பது அவ்வளவு எளிதில்ல. எனவே உங்களுக்கு சிறுநீர் பிரச்சனைகள் இருந்தால் அல்லது சிறுநீர் கழிக்கும் போது ரத்தம் வருவதைக் கண்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 78

  சத்தமே இல்லாமல் ஆண்களை தாக்கும் ’புரோஸ்டேட் புற்றுநோய் ‘.. அறிகுறிகளை எப்படி கண்டறிவது..?

  பின்னர் மருத்தவரின் அறிவுரையின் படி, இரத்தத்தில் உள்ள புரதத்தின் உயர் அளவைக் கண்டறிவதற்கு, புரோஸ்டெட் ஆன்டிஜென் இரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை இதில் சரியாக கண்டறியப்படவில்லை என்றால், துல்லியாக நோய் கண்டறிதலுக்காக புரோஸ்டெட் சுரப்பியைப் பரிசோதித்து எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

  MORE
  GALLERIES

 • 88

  சத்தமே இல்லாமல் ஆண்களை தாக்கும் ’புரோஸ்டேட் புற்றுநோய் ‘.. அறிகுறிகளை எப்படி கண்டறிவது..?

  இதையடுத்து புற்றுநோயின் பாதிப்பு எந்த நிலையில் அதாவது எந்த கட்டத்தில் இருப்பதை என்று பார்க்க PSMA PET ஸ்கேன் மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இதன் பிறகு புதிய கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி ஆகியவை மேற்கொள்ளப்படும். ஆரம்பகால புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான ஆண்கள் குறிப்பிடத்தக்க அறிகுறிகளை அனுபவிப்பதில்லை என்பதால், கட்டி வளரும்போது, ​​அவர்கள் புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகளை அனுபவிக்க நேரிடும். எனவே விழிப்புடன் இருந்தால் மட்டுமே ஆரம்ப நிலையிலேயே அறிகுறிகளை கண்டறிய முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

  MORE
  GALLERIES