இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வியந்து பாராட்டும் ஒரு அற்புதமான நடிகையாக வளம் வருபவர் பிரியங்கா சோப்ரா. தன்னுடைய அற்புதமான நடிப்பு திறனாலும் கட்டுக்கோப்பான உடல் அமைப்பினாலும் பலரையும் கவர்ந்திழுத்துள்ளார். நடிகைகளுக்கு உடல் அமைப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் பிரியங்கா சோப்ரா உடல் அமைப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் தன்னுடைய வாழ்க்கை முறையையே ஆரோக்கியமாக மாற்றும் வகையில் உணவு பழக்கம், உடற்பயிற்சி என அனைத்தையும் மிக சரியாக செய்து வருகிறார்.
நம்மில் பலருக்கும் பிரியங்கா சோப்ராவின் கட்டுக்கோப்பான உடல் அமைப்பை அவர் எவ்வாறு பேணிக் காக்கிறார் என்பதை பற்றிய சந்தேகம் இருக்கக்கூடும். அதற்கு முக்கிய காரணம் பிரியங்கா சோப்ராவின் உணவு கட்டுப்பாடு தான். பிரியங்கா சோப்ராவின் ஃபிட்னஸ் ரகசியத்தை பற்றியும் உணவுக் கட்டுப்பாட்டை பற்றியும் சில விஷயங்களை இப்போது பார்ப்போம்.
பிரியங்கா சோப்ரா ஒரு உணவு பிரியராம்! சமீபத்தில் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு அவர் அளித்த ஒரு நேர்காணலில், “நான் காலை உணவு கொள்ளும்போது மதிய உணவு பற்றி பேசுவேன், மதிய உணவை உட்கொள்ளும் போதே இரவு உணவைப் பற்றிய நினைப்பு வந்துவிடும். குறிப்பாக தீபாவளி கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில் உணவு உட்கொண்டே என்னுடைய உடல் எடையானது அதிகரித்து விடும். ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் அதிகரித்த உடல் எடையை குறைப்பதற்கு நான் முயற்சி செய்து கொண்டிருப்பேன் என அவர் கூறியுள்ளார்.
காலை உணவாக ஆம்லெட் அல்லது அவகடோ டோஸ்ட் ஆகியவற்றை பிரியங்கா சோப்ரா உட்கொள்வாராம். தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பிரியங்கா சோப்ராவிற்கு ஒருவேளை இந்திய உணவின் மீது ஆசை வந்துவிட்டால் இட்லி, தோசை அல்லது போஹா உணவை காலை உணவாக உட்கொள்வாரம். அவர் இந்தியாவிற்கு வரும்போது வீட்டிலே தயார் செய்யப்பட்ட பராத்தாவை மிகவும் விரும்பி உட்கொள்வாரம்.
இதைத் தவிர ஃப்ரெஷ் சாலடுகளையும், மீன் வருவலை காய்கறிகளுடன் சேர்த்து உட்கொள்வதற்கு பிரியங்கா சோப்ராவிற்கு மிகவும் பிடிக்கும். வேலையில் மிகவும் பிசியாக இருக்கும் நேரங்களில் வெஜிடபிள் சாலட்களையும் அல்லது வீட்டிலே தயார் செய்யப்பட்ட தானிய வகைகளை உட்கொள்வார். இதைத் தவிர நம் அனைவரைப் போலவே பிரியங்கா சோப்ராவிற்கும் அவ்வபோது நொறுக்கு தீனிகள் உட்கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டாகும். அது போன்ற நேரங்களில் கைநிறையே மக்கானாஸ் அல்லது நட்களை உட்கொள்வார்.
இவற்றைத் தவிர உடல் எடை குறைப்பதற்கும் பிரியங்கா சோப்ராவிடம் ஒரு அற்புதமான மந்திரம் உள்ளது. இவ்வளவு உணவை உட்கொண்டாலுமே அதற்கேற்ற வகையில் உடற்பயிற்சி செய்து அந்த கலோரிகளை அவர் எரித்து விடுவார். காலை நேரங்களில் தனிப்பட்ட பயிற்சியாளரின் உதவியுடன் கார்டியோ மற்றும் எடை தூக்கும் பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்து விடுகிறார். முக்கியமாக ஸ்கிப்பிங் செய்வது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
அனைத்தையும் தவிர நீர் அருந்துவதன் முக்கியத்துவத்தை பற்றி பிரியங்கா சோப்ரா வலியுறுத்துகிறார். தான் எங்கு சென்றாலும் ஒரு பாட்டில் நிறைய தண்ணீர் நிரப்பி எப்போதும் தன்னுடன் வைத்திருப்பதாக கூறுகிறார். மேலும் அதிக அளவு காபி உட்கொள்வதை தவிர்ப்பதும் உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு வழி என்று பிரியங்கா சோப்ரா பரிந்துரைக்கிறார்.