முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கர்ப்பமாக இருக்கும் போது இந்த விஷயங்களை மறந்து கூட பண்ணாதீங்க!

கர்ப்பமாக இருக்கும் போது இந்த விஷயங்களை மறந்து கூட பண்ணாதீங்க!

கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் நலன் காக்க, அவர்கள் ஒரு சில விஷயங்களில் இருந்து விலகி இருப்பது அவசியம். அந்த வகையில், கர்ப்பிணிப் பெண்கள் விலகியிருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு காணலாம்.

  • 19

    கர்ப்பமாக இருக்கும் போது இந்த விஷயங்களை மறந்து கூட பண்ணாதீங்க!

    கருவை சுமக்கும் ஒவ்வொரு பெண்ணும் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை தவறாமல் கவனிக்க வேண்டியது அவசியம். எனவே தான், கர்ப்பமாக இருக்கும் போது உணவு, வாழ்க்கை முறை, உறக்கம், கர்ப்ப கால உடற்பயிற்சி ஆகியவற்றில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். ஏனென்றால், கர்ப்பமாக இருக்கும் பொது நாம் செய்யும் சில விஷயங்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கு பிடிக்காது என கூறப்படுகிறது. அந்த விஷயங்கள் என்ன என்பதை இங்கே காணலாம்.

    MORE
    GALLERIES

  • 29

    கர்ப்பமாக இருக்கும் போது இந்த விஷயங்களை மறந்து கூட பண்ணாதீங்க!

    அதிக சத்தம் மற்றும் இரைச்சல் : கர்ப்பிணி பெண்கள் கேட்கும் மென்மையான இசை கூட கருவில் உள்ள குழந்தைகளின் மனதை பாதிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் கர்ப்பிணி பெண்கள், அதிக சத்தம் மற்றும் இரைச்சல் நிறைந்த பகுதியில் இருந்து விலகி இருப்பது நல்லது.

    MORE
    GALLERIES

  • 39

    கர்ப்பமாக இருக்கும் போது இந்த விஷயங்களை மறந்து கூட பண்ணாதீங்க!

    அதிகமாக பயணிப்பது : கர்ப்ப காலத்தில் பெண்கள் அலைச்சல் தரும் பயணத்தில் ஈடுபடுதல் கூடாது. இவ்வாறு அவ்வப்போது பயணிப்பது, கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை பாதிப்பதோடு, குழந்தையின் உடல் எடையையும் பாதிக்கும்.

    MORE
    GALLERIES

  • 49

    கர்ப்பமாக இருக்கும் போது இந்த விஷயங்களை மறந்து கூட பண்ணாதீங்க!

    பசியுடன் இருப்பது : கர்ப்ப காலத்தின் போது கர்ப்பிணி பெண்கள் உணவுகளை தவிர்ப்பது கருவில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைப்பாட்டுக்கு வழிவகுக்கும். எனவே, கர்ப்பிணி பெண்கள், தாமதிக்காமல் சமயத்திற்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 59

    கர்ப்பமாக இருக்கும் போது இந்த விஷயங்களை மறந்து கூட பண்ணாதீங்க!

    காரமான உணவுகளை உட்கொள்வது : அதிக மசாலா கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள், காரமான உணவுகளை கர்ப்பிணி பெண்கள் தவிர்ப்பது நல்லது. காரணம் இந்த உணவுகள் கருவில் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை பெருமளவு பாதிக்கும்.

    MORE
    GALLERIES

  • 69

    கர்ப்பமாக இருக்கும் போது இந்த விஷயங்களை மறந்து கூட பண்ணாதீங்க!

    அதிகமான வெயில் மற்றும் சூடு : தாயின் கருவறையில் இருக்கும் குழந்தைகளின் கண்களுக்கு வெளிச்சம் என்பது புதிதான விஷயம் ஆகும். அந்த வகையில், கர்ப்பிணி பெண்களின் வயிற்றுப்பகுதியில் அதிக வெளிச்சம் படும்போது, குழந்தைகள் அசௌகரியத்தை உணரும் வாய்ப்புகள் அதிகம்.

    MORE
    GALLERIES

  • 79

    கர்ப்பமாக இருக்கும் போது இந்த விஷயங்களை மறந்து கூட பண்ணாதீங்க!

    படுக்கையில் புரள்வது : கர்ப்பிணி பெண்கள் ஓய்வு எடுக்கும்போது, புரண்டு படுப்பது, மல்லார்ந்து படுப்பது, குப்புறப்படுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு செய்யும்போது, குழந்தை நெஞ்சுப்பகுதி நோக்கி நகர்ந்துவிடும்.

    MORE
    GALLERIES

  • 89

    கர்ப்பமாக இருக்கும் போது இந்த விஷயங்களை மறந்து கூட பண்ணாதீங்க!

    வயிரை இறுக்குவது போல உடை அணிவது : கர்ப்பிணி பெண்களின் வயிற்றுக்கு இறுக்கம் அளிக்கும் விதமாக, இறுக்கமான ஆடைகளை அணிய கூடாது. அதேப்போன்று, வயிற்றை அழுத்துவது, அழுத்தம் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் கூடாது.

    MORE
    GALLERIES

  • 99

    கர்ப்பமாக இருக்கும் போது இந்த விஷயங்களை மறந்து கூட பண்ணாதீங்க!

    அளவுக்கு அதிகமாக சிரிப்பது : கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் சிரித்து மகிழ்ச்சியாக இருப்பது அவசியம் தான். இருப்பினும், வயிறு குலுங்க சிரிப்பது கூடாது. இவ்வாறு வயிறு குலுங்க சிரிப்பது, வயிற்றில் தசை பிடிப்புக்கு வழிவகுப்பதோடு, குழந்தையின் அசௌகரியத்திற்கும் வழிவகுக்கும்.

    MORE
    GALLERIES