ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பயங்கள்.. எது உண்மையானது..? எது தேவையற்றது..? தெரிந்து கொள்ளுங்கள்!

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பயங்கள்.. எது உண்மையானது..? எது தேவையற்றது..? தெரிந்து கொள்ளுங்கள்!

கர்ப்பிணி பெண்களுக்கு அதிக அளவில் மன நிலை மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு இது ஒரு வகையான பயத்தை உண்டாக்கும். அப்படி கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய பயங்களில் சில உண்மையானவை, சில தேவையற்றவையாக இருக்கும்.

 • 16

  கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பயங்கள்.. எது உண்மையானது..? எது தேவையற்றது..? தெரிந்து கொள்ளுங்கள்!

  பொதுவாக கர்ப்ப காலத்தில் நமது மனம் சாந்தமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், உடலில் ஏற்பட கூடிய பல்வேறு ஹார்மோன்களின் மாற்றத்தால் நமது மனநிலை சாந்தமாக இருக்காது. இதனால் கர்ப்பிணி பெண்களுக்கு அதிக அளவில் மன நிலை மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு இது ஒரு வகையான பயத்தை உண்டாக்கும். அப்படி கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய பயங்களில் சில உண்மையானவை, சில தேவையற்றவையாக இருக்கும். இவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.

  MORE
  GALLERIES

 • 26

  கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பயங்கள்.. எது உண்மையானது..? எது தேவையற்றது..? தெரிந்து கொள்ளுங்கள்!

  சாப்பிடும் உணவுகள் : பொதுவாக, கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடும் உணவுகள் கருவில் உள்ள குழந்தையை பாதிக்குமா என்று பலர் அடிக்கடி பயப்படுவார்கள். இது உண்மையான பயம் தான். நாம் எடுத்து கொள்ளும் உணவுகள் நமது கருவில் உள்ள குழந்தைக்கு நேரடியாக செல்வதால் நாம் சத்தான உணவுகளை மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். மது, பச்சை இறைச்சி, பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் சீஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இவற்றைக் கூடுதலாக சாப்பிட்டால் குழந்தையை பாதிக்கும்.

  MORE
  GALLERIES

 • 36

  கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பயங்கள்.. எது உண்மையானது..? எது தேவையற்றது..? தெரிந்து கொள்ளுங்கள்!

  பனிக்குடம் உடைதல் : கர்ப்பிணிப் பெண்களில் பலருக்கும் இருக்கும் மிக பெரிய பயம், பனிக்குடம் உடைந்து விடுமோ என்பது தான். இதுவும் உண்மையான பயம் தான். 15 சதவீதத்திற்கும் குறைவான பெண்களுக்கே இப்படி ஆவதாக கூறுகின்றனர். மேலும் வயிற்றில் இருந்து ஒருவிதமான உணர்வை இது ஏற்படுத்துவதன் மூலம் பனிக்குடம் உடைதல் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 46

  கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பயங்கள்.. எது உண்மையானது..? எது தேவையற்றது..? தெரிந்து கொள்ளுங்கள்!

  குறைமாத பிரசவம் : புகைப் பழக்கம் அல்லது தொற்றுகள் உள்ளவர்களுக்கு குறை மாதத்தில் குழந்தை பிறப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதே போன்று ஒன்றுக்கும் மேற்பட்ட கரு உருவாகும் போதும் இப்படி ஏற்பட வாய்ப்பு உண்டு. சிலருக்கு டெலிவரி தேதி முடிந்த பிறகும் குழந்தை வயிற்றிலே இருக்கும். மேற்சொன்ன சூழல்களில் அவசியம் மருத்துவரை அணுக வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 56

  கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பயங்கள்.. எது உண்மையானது..? எது தேவையற்றது..? தெரிந்து கொள்ளுங்கள்!

  தூக்கம் : கர்ப்பிணிகளுக்கு தூக்கும்போது புரண்டு படுப்பதால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா என்று பயப்படுவார்கள். ஆனால், தூக்கத்தில் புரண்டு படுப்பதே சௌகரியமாக உணர்வதற்குத் தான். எனவே, இது குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. பொதுவாக தூங்கும்போது நிதானமாக இருக்க வேண்டும். அப்படி செய்தால் இது போன்ற எண்ணங்கள் தோன்றாது.

  MORE
  GALLERIES

 • 66

  கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பயங்கள்.. எது உண்மையானது..? எது தேவையற்றது..? தெரிந்து கொள்ளுங்கள்!

  கருக்கலைவு : வயிற்றில் உள்ள கரு கலைந்து விடுமோ என்கிற பயம் பல கர்ப்பிணிகளுக்கும் இருக்கும். பொதுவாக முதல் ட்ரைமெஸ்டரில் குழந்தையை பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த காலத்தில் தான் கருக்கலைவு ஏற்படும். அதன் பிறகு பெரிய அளவில் கருக்கலைவு இருக்காது என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், எந்த வேலையை செய்தாலும் நிதானமாக செய்யுங்கள். எக்காரணம் கொண்டும் மன அழுத்தம் கொள்ளாதீர்கள். ஒருவேளை உங்களுக்கு அதிக அளவில் பயம் இருந்தால், உங்களுக்கு பிடித்தவரிடம் மனம்விட்டு பேசுங்கள். இதை செய்தாலே மனநிம்மதி பெற்று நீங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம்.

  MORE
  GALLERIES