இருந்தாலும் கூட 18 வயதிற்கு பிறகு உயரமாக வளர் முடியுமா என்று பலரும் சிந்திப்பார்கள். ஏனென்றால் உடலை ஃபிட்டாக மாற்றுவது என்பது எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், ஆனால் உயரம் என்பது குறிப்பிட்ட காலகட்டம் வரை தான். சரியான உயரத்தில் இருக்க வேண்டும் என்பதே பலரின் ஆசையாக இருக்கிறது. குழந்தை பருவத்திலேயே உயரத்தை அதிகரிக்க சிறந்த உணவு, ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி உதவும் என்பது அனைவரும் அறிந்ததே. எனினும் டீனேஜின் இறுதியில் இருப்பவர்கள் அலல்து டீனேஜை கடந்து சில வருடங்கள் ஆனவர்கள் உயரமாக வளர முடியுமா என்பதை கண்டறிய பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
உயரமாக வளர்வது தொடர்பாக குறிப்பிடும் சுகாதார நிபுணர்கள் மரபியல், அன்றாட உணவுமுறை, வாழ்க்கை முறை, தினசரி செயல்பாடுகள் போன்ற பல காரணிகள் ஒருவரின் ஒட்டுமொத்த உயரத்திற்கு பங்களிக்கின்றன. குறிப்பாக ஒருவரது உயரத்தில் மரபணுக்களின் பங்கு சுமார் 60-80% என்றும், இதனை கட்டுப்படுத்த முடியாது என நிபுணர்கள் நம்புகிறார்கள். அதே நேரம் மீதமுள்ள 40-20 சதவீத உயரம் என்பது நம்முடைய கைகளில் இருப்பதாக குறிப்பிடுகிறார்கள்.
புள்ளிவிவரங்களின்படி நாம் வளரும் தருணத்தில் குறிப்பாக பருவ வயது வரை பெரும்பாலானோர் ஆண்டுதோறும் சராசரியாக 2 இன்ச் வளர்க்கிறார்கள். மேலும் இளமைப் பருவத்திற்கு பின் முதிர்ச்சி அடையும் வரை அல்லது 18 வயது வரை 4% வரை உயரம் அதிகரிக்கலாம். பின் உடல் உயரமாவதை தடைபடுகிறது. இதற்கு முக்கிய காரணம் நம் எலும்புகள் குறிப்பாக க்ரோத் பிளேட்ஸ் (growth plates). இவை முதிர்ந்த எலும்புகளின் எதிர்கால நீளம் மற்றும் வடிவத்தை தீர்மானிக்கின்றன.
இவை குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரின் நீண்ட எலும்புகளின் முனைகளுக்கு அருகில் உள்ள திசுக்களின் பகுதியில் அமைந்துள்ளன. ஒவ்வொரு நீண்ட எலும்பிலும் குறைந்தது 2 க்ரோத் பிளேட்ஸ்கள் உள்ளன, இவை அகலமாக இருப்பதை விட நீளமாக இருக்கும். க்ரோத் பிளேட்ஸ் ஆக்டிவாக இருப்பதன் காரணமாகவும், ஒரு நபர் முதன்மையாக அவரது நீண்ட எலும்புகளின் நீளம் காரணமாகவும் உயரமாக வளர்கிறார். சராசரியாக பெண்கள் 13 வயது மற்றும் ஆண்கள் 14 வயதுகளில் சந்திக்கும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக சில ஆண்டுகளில் க்ரோத் பிளேட்ஸ்கள் கடினமாகின்றன அல்லது மூடிவிடுகின்றன மற்றும் எலும்புகளின் நீளமும் நின்று விடும்.
சராசரியாக பெண்களில் 16 வயதிலும், ஆண்களில் 14 - 19 வயது வரையிலும் க்ரோத் பிளேட்ஸ்கள் க்ளோஸாகி விடுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். 18 வயது என்பது குழந்தை பருவம் & பெரியவர் என்பதற்குமான இடைப்பட்ட நிலை. எனினும்18 வயதிற்கு பிறகு உயரமாக முடியாதா என கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் உயரமாக விரும்புபவர்கள் சில வெளிப்புற உதவியுடன் அவர்களது வழக்கத்தில் சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் சில இன்ச் உயரத்தை பெறலாம். ஆனால் இந்த வளர்ச்சி 18-19 ஆண்டுகளில் மட்டுமே நிகழும், வாழ்நாள் முழுவதும் அல்ல என்று கூறுகிறார்கள் நிபுணர்கள். டீனேஜ் முடியும் தருவாயில் உள்ளோர் உயரத்தை அதிகரிக்க செய்ய வேண்டியவை கீழே:
சமச்சீரான உணவு : உணவுப்பழக்கத்தில் போதுமான அளவு வைட்டமின்ஸ் & மினரல்ஸ்களை சேர்த்து கொள்வதை உறுதி செய்வது எந்த குறைபாடும் ஏற்படாமல் தடுப்பதோடு உயரத்தை பாதிக்காது. வலுவான எலும்புகளை பெற, எலும்புகளின் நீளத்தை அதிகரிக்க வைட்டமின் டி, கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கிய டயட் அவசியம். எலும்பு வளர்ச்சியை அதிகரிக்க மற்றொரு சிறந்த வழி பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் டயட்டில் சேர்ப்பது.
புகைக்கு நோ : தொடர்ந்து புகைப்பது ஒருவரது தனிப்பட்ட வளர்ச்சியிலும், அவரை சுற்றியுள்ளவர்களின் வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு நாளைக்கு 10 அல்லது அதற்கு மேற்பட்ட சிகரெட்டுகளை புகைக்கும் தாய்மார்களின் குழந்தைகள், புகைபிடிக்காத தாய்மார்களின் குழந்தைகளை விட சராசரியாக 0.65 செ.மீ உயரம் குறைவாக இருப்பதாக ஆய்வு சொல்கிறது. சிகரெட் புகைக்கும் பழக்கம் எலும்பு வளர்ச்சியின் போது எண்டோகாண்ட்ரல் ஆசிஃபிகேஷனை (endochondral ossification) மோசமாக பாதிக்கிறது. சிகரெட்டில் இருக்கும் நிகோடின் பசியை கட்டுப்படுத்துவதன் மூலம் வளர்ச்சியை குறைக்கலாம் அல்லது கட்டுப்படுத்தலாம்.
நல்ல தோரணை : மோசமான உடல் தோரணை ஒருவரை மிக குட்டையாக காட்டும். எனவே உங்களது ஒருவர் தனது உண்மையான உயரத்தை வெளிப்படுத்த உட்காரும் போதும் மற்றும் நிற்கும் போதும் உடல் தோரணையை சரியாக வைத்து கொள்வது மிகவும் முக்கியம். அதே போல இளம் வயதில் பெறுவர் பின்பற்றும் மோசமான உடல் தோரணையானது உடல் தளர்ச்சியை உண்டாக்கி உண்மையான உயரத்தை குறைக்கும். முதுகெலும்பை வளைத்து உட்காருவது, கழுத்து மற்றும் தோள்பட்டையை சரியான தோரணையில் வைக்காமல் விடுவது கழுத்து மற்றும் முதுகு வலியை ஏற்படுத்துகிறது.