முகப்பு » புகைப்பட செய்தி » வயிற்று வலியால் அவதியா.? வாயு தொல்லை என அலட்சியம் வேண்டாம்... இந்த பிரச்னைகளாக கூட இருக்கலாம்

வயிற்று வலியால் அவதியா.? வாயு தொல்லை என அலட்சியம் வேண்டாம்... இந்த பிரச்னைகளாக கூட இருக்கலாம்

Abdominal Pain | வாயுத்தொல்லை, ஆசிட் ரிஃப்ளெக்ஸ் அல்லது செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகளால் மட்டும் வயிறு வலிப்பதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அடிக்கடி வயிறு வலி வருவதும், மிக தீவிரமாக இருப்பதும் சாதாரணமாக கடந்து செல்லக் கூடிய விஷயமல்ல. அதுகுறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  • 17

    வயிற்று வலியால் அவதியா.? வாயு தொல்லை என அலட்சியம் வேண்டாம்... இந்த பிரச்னைகளாக கூட இருக்கலாம்

    வாயு தொல்லை காரணமாக வயிறு வலிப்பது சகஜமான விஷயம் தான். சிலருக்கு இது அடிக்கடி வந்து போகும். பொதுவாக வாயுத் தொல்லையால் வயிறு வலிக்கும்போது வயிறு உப்புசம், ஏப்பம், குமட்டல், வயிறு இறுக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும். ஆனால், வாயுத்தொல்லை, ஆசிட் ரிஃப்ளெக்ஸ் அல்லது செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகளால் மட்டும் வயிறு வலிப்பதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அடிக்கடி வயிறு வலி வருவதும், மிக தீவிரமாக இருப்பதும் சாதாரணமாக கடந்து செல்லக் கூடிய விஷயமல்ல. அதுகுறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 27

    வயிற்று வலியால் அவதியா.? வாயு தொல்லை என அலட்சியம் வேண்டாம்... இந்த பிரச்னைகளாக கூட இருக்கலாம்

    தசை பிடிப்பு மற்றும் சிரத்தை : தசை பிடிப்பு மற்றும் தசைகளுக்கு நாம் கொடுக்கும் அதிக சிரத்தை ஆகியவை காரணமாக வயிறு வலி வரலாம். நாம் எந்தவொரு செயலை செய்யும்போது வயிற்றின் மீது அதிகப்படியான அழுத்தம் ஏற்படுகிறது. அதேபோல, உடல் எடை குறைக்க முயற்சி செய்யும்போது வயிற்றுப் பகுதியில் பிடிப்பு மற்றும் வலி போன்றவை ஏற்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 37

    வயிற்று வலியால் அவதியா.? வாயு தொல்லை என அலட்சியம் வேண்டாம்... இந்த பிரச்னைகளாக கூட இருக்கலாம்

    உணவு ஒவ்வாமைகள் : நீங்கள் சாப்பிடும் உணவு உங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் செரிமானத்தில் பிரச்சனை ஏற்படும். குறிப்பாக, வயிறு வலி உடனடியாக வரும். வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு, சரும அழற்சி மற்றும் அரிப்பு போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும். பெரும்பாலும் உணவு சாப்பிட்ட சில மணி நேரத்தில் இந்த அறிகுறிகள் தென்படும்.

    MORE
    GALLERIES

  • 47

    வயிற்று வலியால் அவதியா.? வாயு தொல்லை என அலட்சியம் வேண்டாம்... இந்த பிரச்னைகளாக கூட இருக்கலாம்

    சீலியாக் நோய்: கோதுமை, பார்லி போன்ற தானியன்கள் உள்ள க்ளூடென் என்ற ஒருவகை புரதம் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதே சீலியாக் நோய் ஆகும். இது சிறுகுடல் பகுதியில் அழற்சியை ஏற்படுத்துவதோடு, வயிற்று வலி மற்றும் அசௌகரியத்தை உண்டாக்குகிறது.

    MORE
    GALLERIES

  • 57

    வயிற்று வலியால் அவதியா.? வாயு தொல்லை என அலட்சியம் வேண்டாம்... இந்த பிரச்னைகளாக கூட இருக்கலாம்

    சிறுநீர் பாதை தொற்று : பெண்களுக்கு சிறுநீர் பாதை தொற்று ஏற்படுவது வெகு இயல்பான விஷயம். ஆண்களுக்கும் கூட இது ஏற்படலாம். பாக்டீரியா போன்றவைகள் சிறுநீர் குழாய்களில் தங்கும்போது இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. அதன் எதிரொலியாக வயிறு வலி மற்றும் சிறுநீர் கழிக்கையில் வலி ஏற்படும்.

    MORE
    GALLERIES

  • 67

    வயிற்று வலியால் அவதியா.? வாயு தொல்லை என அலட்சியம் வேண்டாம்... இந்த பிரச்னைகளாக கூட இருக்கலாம்

    எண்டோமெட்ரியோசிஸ் : இது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை ஆகும். இடுப்பு அல்லது அடிவயிற்றுப் பகுதியில் வலி ஏற்படும். கர்ப்பப்பைக்கு வெளியே திசு வளருவதன் காரணமாக இந்த பாதிப்பு வருகிறது.

    MORE
    GALLERIES

  • 77

    வயிற்று வலியால் அவதியா.? வாயு தொல்லை என அலட்சியம் வேண்டாம்... இந்த பிரச்னைகளாக கூட இருக்கலாம்

    அடிக்கடி வயிறு வலி வருவதற்கான காரணங்கள் : வேறு சில காரணங்களாலும் அடிக்கடி வயிறு வலி. அது கால் பிளாடர் கல், சிறுநீரகத்தில் கல் போன்ற பிரச்சினைகளாக இருக்கலாம். சில வலி சாதாரண மருந்து மாத்திரைகளில் சரியாகிவிடும். தொடர் பிரச்சினை இருந்தால் வயிறு சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

    MORE
    GALLERIES