பெண்கள் என்றாலே மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய மாதவிடாய் காலம் பெண்களுக்கு அதிக வலியை ஏற்படுத்தும். அந்த நாள்களில் உடலில் இருந்து அதிகளவில் வெளியாகும் இரத்தப் போக்கினால் சோர்வான மனநிலையை அடைவார்கள். இதுப்போன்று மாதவிடாய் சமயத்தில் மட்டுமில்லாமல் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் போதும் பெண்களின் பிறப்புறப்பில் ரத்தம் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். இதோடு இந்த நேரங்களில் நீங்கள் எவ்வித அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் தெரிவிக்கின்றனர். இதோ மாதவிடாய் சமயம் இல்லாமல் பிறப்புறப்பில் ரத்தம் வர வேறு என்னென்ன காரணங்கள்? உள்ளது என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.
கருத்தடை உபயோகித்தல்: ஹெல்த் சர்வீசஸ் (NHS) அறிவிப்பின் படி, பெண்கள் கருத்தடை மாத்திரைகளை உபயோகித்தல், புரோஜெஸ்டோஜென்-மட்டும் கருத்தடை மாத்திரை, கருத்தடை இணைப்பு (டிரான்ஸ்டெர்மல் பேட்ச்), கருத்தடை உள்வைப்பு அல்லது ஊசி போன்றவற்றை நீங்கள் உபயோகிக்கும் போது பிறப்புறப்பில் இரத்தப்போக்கு ஏற்படும். இருந்தப் போதும் உங்களுக்கு இரத்தப்போக்கு சில மாதங்களுக்கு மேல் நீடித்தால், மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
பாலியல் ரீதியாக பரவும் தொற்று (STI):கிளமிடியா போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் (STI கள்) பிறப்புறப்பில் இரத்தப்போக்கிற்கு வழிவகுக்கும். STI கள் என்பது ஒருவரிடமிருந்து நபருக்கு பரவும் மற்றும் பாலியல் செயல்பாடுகள் மூலம் ஏற்படும் தொற்றுகள் என்பதால், நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டிருந்தால், STI களுக்கு உங்களை நீங்களே பரிசோதித்துக்கொள்வது நல்லது.
இனப்பெருக்க புற்றுநோய்கள்:கர்ப்பப்பை வாய், பிறப்புறுப்பு அல்லது பிறப்புறுப்பு புற்றுநோய் உள்ளிட்ட சில இனப்பெருக்க புற்றுநோய்களாலும் ஒழுங்கற்ற இரத்தப்போக்கு ஏற்படலாம். நீங்கள் 25 முதல் 64 வயதிற்குட்பட்டவராக இருந்தால், வழக்கமான கர்ப்பப்பை வாய்ப் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் ஒழுங்கற்ற இரத்தப்போக்கு ஏற்பட்டால் அலட்சியமாக இல்லாமல் உடனடியாக மருத்துவரிடம் சோதனை செய்துக்கொள்ள வேண்டும் .