திருமணம் செய்து கொண்ட தம்பதியர் பெற்றோர் ஆக முடியாமல் இருக்கும் சூழலுக்கு பெண்கள் மட்டுமல்ல சில நேரங்களில் ஆண்களும் காரணமாக இருக்கிறார்கள். இது தொடர்பான புள்ளிவிவரங்களின் படி சுமார் 40% தம்பதிகளில் காணப்படும் மலட்டுத்தன்மை பிரச்சனைகளுக்கு ஆண்கள் மட்டுமே தனிப்பட்ட காரணமாகவோ அல்லது பங்களிக்கும் காரணமாகவோ இருக்கின்றனர் என கூறப்படுகிறது.
இந்த நவீன காலத்தில் நாம் பயன்படுத்தும் லேப்டாப்கள், ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்கள் போன்ற மின்னணு சாதனங்கள் ஆணின் விந்து உற்பத்திக்கு தீங்கு விளைவித்து, விந்தணுக்களின் எண்ணிக்கையை பாதிக்கிறது. இது தவிர நச்சு கலந்த காற்று, குடி மற்றும் புகை போன்ற தீய பழக்கங்களும் குறைந்த விந்து எண்ணிக்கைக்கு காரணமாகின்றன. ஆண் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்களை பார்க்கலாம்.
இது தொடர்பாக 1992-ல் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஆய்வில் 60 ஆண்டுகளில் ஆண்களின் விந்து எண்ணிக்கை சுமார் 50% குறைந்துள்ளது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2017-ல் எடுக்கப்பட்ட ஆய்வில் 1973 - 2011-ம் ஆண்டுகளுக்கு இடையில் ஆண்களின் விந்தணு செறிவு சுமார் 50-60% குறைந்துள்ளது தெரிய வந்தது. ஒரு ஆண் ஆரோக்கியமான விந்தணு எண்ணிக்கையை கொண்டிருக்கிறார் என்றால் ஒரு மில்லி லிட்டருக்கு அவரது விந்தணுவின் செறிவு 15 முதல் 200 மில்லியன் வரை இருக்க வேண்டும்.
நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் நச்சுகள் விந்துவின் தரத்தை கெடுக்கின்றன. மின்னணு உபகரணங்கள். உணவுகளில் இருக்கும் கனரக உலோகங்களான ஈயம், கால்சியம், ஆர்சனிக் போன்றவை விந்தணுக்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். தவிர முன்னர் குறிப்பிட்டபடி செல்போன்கள், லேப்டாப்கள், மோடம்கள் போன்றவை விந்தணுவின் தரத்தை கெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த எலெக்ட்ரானிக் டிவைஸ்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் , ஆண் விந்தணுவின் வடிவம் மற்றும் வேகம் சிதைக்கப்படுகிறது.