பொதுவாகவே அந்தரங்க உறுப்பு தன்னை தானே சுத்தம் செய்துகொள்ளும் என்கின்றனர். குறிப்பாக பெண்களுக்கு கர்ப்பப்பை தன்னைத்தானே சுத்தம் செய்து அதன் கழிவுகளை அந்தரங்க உறுப்பு வழியாகத்தான் வெளியேற்றும். அதைத்தான் பெண்கள் வெள்ளைப்படுதல் என்பார்கள். எனவே அவற்றை நிச்சயமாக நாம் நன்கு கழுவி சுத்தம் செய்தல் அவசியம். அதற்காக சோப்பு பயன்படுத்தக் கூடாது.
இதற்கு சாதாரணமாக குளிக்கும் தண்ணீரைக்கொண்டு கழுவினாலே போதுமானது என்கின்றனர். ஏனெனில் அந்தரங்க பகுதியில் வறட்சியை ஏற்படுத்தாமக் இருக்க அங்கு எண்ணெய் பசை இருக்கும். இதை நாம் சோப்பு கொண்டு கழுவுவதால் யோனியின் பிஹெச் அளவு குறைந்து அரிப்பு, வறட்சி மற்றும் பாக்டீரியாக்களின் உருவாக்கமும் அதிகரிக்கும். இதனால் தேவையற்ற தொற்று மற்றும் கிருமிகளின் உருவாக்கத்திற்கு காரணமாகிவிடுவோம்.