முதுகுத் தண்டு வட பாதிப்பு அல்லது காயத்தால் பாதிக்கப்பட்ட 9,000 நபர்களுக்கும் மேற்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம், ஒரு தனியார் நிறுவன காப்பீடு சம்மந்தப்பட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், காயம் அல்லது வலி இல்லாதவர்களுடன் ஒப்போடும் போது, முதுகுத் தண்டு வடத்தின் பாதிப்பு, காயம் அல்லது நாள்பட்ட வலி இருப்பவர்களுக்கு மன நல ரீதியான பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக, மனச்சோர்வு, பதட்டம், உள்ளிட்ட பல்வேறு உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட 80 சதவிகித வைப்பு உள்ளது. மேலும், நாட்பட்ட வழியால் அவதிப்படுபவர்களும் எதிர்மறையாக பாதிக்கப்படுவார்கள்.
மன நலம் மற்றும் வலிக்கும் இடையிலான தொடர்பு பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் குறிப்பிட்ட ஆய்வு, மிச்சிகன் மருத்துவமனையின் மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு, ‘ஸ்பைனல் கார்ட்’ என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டது. முதுகுத்தண்டு காயத்தால் பாதிக்கப்பட்ட 9,000 க்கும் மேற்பட்ட நபர்களின் தனியார் காப்பீட்டு கிளைம்கள் மற்றும் எந்தக் காயமும் இல்லாத 1 மில்லியனுக்கும் அதிகமான வயது வந்த நபர்களின் ஆரோக்கியமும் ஆய்வு செய்யப்பட்டது.
மன நல மாற்றங்கள், தூக்கமின்மை, மறதி உள்ளிட்ட பல்வேறு உளவியல் ரீதியான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. முதுகுத் தண்டு காயம் பட்டவர்கள் மற்றும் நாட்பட்ட காயம் மற்றும் வலியுடன் வாழ்பவர்கள், காயம் இல்லாதவர்களை விட அடிக்கடி மனநலம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பது கண்டறியப்பட்டது.