இன்றைய காலத்தில் பெண்களை அதிகளவில் பாதிப்புக்குள்ளாகும் நோய்களில் ஒன்றாக உள்ளது பிசிஓஎஸ் எனப்படும் பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் தான். ஹார்மோன் பிரச்சனைகளால் ஏற்படும் இந்நோயில் பெண்களக்கு குழந்தை பிறப்பு தாமதமாகிறது. இதனால் தான் இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். ஒருவேளை நீங்கள் பிசிஓஎஸ் பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்றால் பல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். முதலில் பிசிஓஎஸ் நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்னென்ன? என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் PCOS: PCOS உள்ள பெண்களுக்கு அதிக கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இருக்கும். மேலும் அவற்றில் சில ஹார்மோன்கள் மற்றும் வளர்ச்சிக் காரணிகள் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, உடலில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. எனவே முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.
எப்படி பராமரிப்பது?... பிசிஓஎஸ் பிரச்சனைகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால், நீங்கள் ஆரோக்கியமான எடையை பராமரிப்பது முக்கியம். உங்களது உடல் எடையை நீங்கள் குறைக்கும் போது இன்சுலின் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவும் சேர்ந்து குறையும். இதோடு மீண்டும் அண்டவிடுப்பை ஏற்படுத்தக்கூடும். இதனால் குழந்தை பிறப்பில் எவ்வித தாமதமும் ஏற்படாது.