முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் பீட்ரூட் சாப்பிடக்கூடாதாம்.. கவனமாக இருங்கள்..!

உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் பீட்ரூட் சாப்பிடக்கூடாதாம்.. கவனமாக இருங்கள்..!

பீட்ரூட் ஜூஸில் உள்ள சோடியம் மற்றும் கால்சியத்தின் அளவு ரத்த நாளங்களின் சுவர்களில் படியும் அதிகப்படியான கால்சியத்தை நீக்குகிறது.

 • 16

  உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் பீட்ரூட் சாப்பிடக்கூடாதாம்.. கவனமாக இருங்கள்..!

  ஊட்டச்சத்துக்களின் வளமான ஆதாரமாக இருக்கும் காயான பீட்ரூட் மிகசிறந்த ஆரோக்கியமான வேர் காய்கறி (root vegetable) ஆக உள்ளது. நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பீட்ரூட்டை சிலர் சாலட் வடிவில் எடுத்து கொள்கின்றனர். சிலர் பொரியல் செய்தும், இன்னும் சிலர் ஜூஸ் செய்தும் குடித்து வருகின்றனர். பீட்ரூட்டில் பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் பி6, வைட்டமின் பி9, வைட்டமின் சி, பீடைன் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளது. ரத்த சோகை பிரச்சனை, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும். ரத்த நாளங்களுக்கு ஏற்படும் சேதத்தை கட்டுப்படுத்துவதில் பீட்ரூட்டில் இருக்கும் ஃபோலேட் முக்கிய பங்கு வகிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 26

  உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் பீட்ரூட் சாப்பிடக்கூடாதாம்.. கவனமாக இருங்கள்..!

  பீட்ரூட் ஜூஸில் உள்ள சோடியம் மற்றும் கால்சியத்தின் அளவு ரத்த நாளங்களின் சுவர்களில் படியும் அதிகப்படியான கால்சியத்தை நீக்குகிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கவும் மற்றும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இப்போது வரை பீட்ரூட்டின் நன்மைகளை பற்றி நாம் சுருக்கமாக பார்த்தோம்.உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் அதே நேரத்தில், பீட்ரூட் சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட சிலர் எக்காரணம் கொண்டும் பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்ளக் கூடாது.

  MORE
  GALLERIES

 • 36

  உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் பீட்ரூட் சாப்பிடக்கூடாதாம்.. கவனமாக இருங்கள்..!

  குறைந்த ரத்த அழுத்த நோயாளிகள் : நாம் மேலே பார்த்தபடி அதிக ரத்த அழுத்தம் கொண்டவர்கள் பீட்ரூட்டை சாப்பிட்டால் அவர்களுக்கு அது நன்மை பயக்கும். ஆனால் குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். ஏனென்றால் இவர்கள் பீட்ரூட் சாப்பிடுவது அவர்களது ரத்த அழுத்தத்தை இன்னும் குறைக்கிறது. எனவே குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் டயட்டில் இருந்து பீட்ரூட்டை விலக்கி வைக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 46

  உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் பீட்ரூட் சாப்பிடக்கூடாதாம்.. கவனமாக இருங்கள்..!

  கல் இருக்கும் நோயாளிகள் : உடல் உள்ளுறுப்புகளில் கல் இருக்கும் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்ள கூடாது. பித்தப்பை அல்லது சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் பீட்ரூட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பீட்ரூட்டில் ஆக்சலேட்டின் அளவு அதிகமாக இருப்பதால் சிறுநீரகம் உள்ளிட்ட உள்ளுறுப்புகளில் காணப்படும் கற்கள் பிரச்சனையை அதிகரிக்க செய்யும்.

  MORE
  GALLERIES

 • 56

  உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் பீட்ரூட் சாப்பிடக்கூடாதாம்.. கவனமாக இருங்கள்..!

  அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் : ஒருவருக்கு ஏதேனும் அலர்ஜி அல்லது ஸ்கின் ரேஷ் பிரச்சனை இருந்தால் தங்கள் உணவில் பீட்ரூட் சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும். அலர்ஜி உள்ளவர்கள் பீட்ரூட் சாப்பிடுவது அவர்களது அலர்ஜி பிரச்சனையை அதிகப்படுத்தி விடும்.

  MORE
  GALLERIES

 • 66

  உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் பீட்ரூட் சாப்பிடக்கூடாதாம்.. கவனமாக இருங்கள்..!

  நீரிழிவு நோயாளிகள் : நீரிழிவு நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது அவர்களது பிரச்சனையை அதிகரிக்க செய்யும். பீட்ரூட்டில் அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளதால் இதை சாப்பிடுபவர்களின் உடலில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் பீட்ரூட் சாப்பிட விரும்பினால் தங்கள் நிலைமைக்கேற்ப மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிடுவதா அல்லது வேண்டாமா என்பது தீர்மானித்து கொள்ளலாம்.

  MORE
  GALLERIES