முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » டைபாய்டை உருவாக்கும் ”பானி பூரி ” : சாலையோர சாட் உணவுகளை தவிர்க்கவும்.. எச்சரிக்கும் சுகாதார இயக்குநர்

டைபாய்டை உருவாக்கும் ”பானி பூரி ” : சாலையோர சாட் உணவுகளை தவிர்க்கவும்.. எச்சரிக்கும் சுகாதார இயக்குநர்

இந்தியாவில் பருவமழை தொடங்கி சில வாரங்கள் மட்டுமே ஆகும் நிலையில் டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை போன்ற தண்ணீரால் பரவும் மற்றும் உணவின் மூலம் பரவும் நோய்த்தொற்றுகள் ஏராளமாக அதிகரித்துள்ளன.

 • 110

  டைபாய்டை உருவாக்கும் ”பானி பூரி ” : சாலையோர சாட் உணவுகளை தவிர்க்கவும்.. எச்சரிக்கும் சுகாதார இயக்குநர்

  பருவயின் வருகையுடன், தெலுங்கானாவில் டைபாய்டு நோயும் அதிகரித்துள்ளன. மேலும் பதிவுசெய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு street food என்று சொல்லக்கூடிய ‘பானி பூரி’ தான் காரணம் என்று சுகாதார அதிகாரிகள் சாட்டுகின்றனர். மே மாதத்தில், தெலுங்கானாவில் 2,700 டைபாய்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 2,752 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES

 • 210

  டைபாய்டை உருவாக்கும் ”பானி பூரி ” : சாலையோர சாட் உணவுகளை தவிர்க்கவும்.. எச்சரிக்கும் சுகாதார இயக்குநர்

  பொது சுகாதார இயக்குனர் டாக்டர் ஜி சீனிவாச ராவ், டைபாய்டை "பானி பூரி நோய்" என்று குறிப்பிட்டுள்ளார். மழைக்காலத்தில் சாலையோர உணவுகளை, குறிப்பாக பானி பூரியை தவிர்க்குமாறு அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்துகிறது. விற்பனையாளர்கள் சுகாதாரத்தை உறுதி செய்து, பாதுகாப்பான குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் டாக்டர் ராவ் கூறினார்.

  MORE
  GALLERIES

 • 310

  டைபாய்டை உருவாக்கும் ”பானி பூரி ” : சாலையோர சாட் உணவுகளை தவிர்க்கவும்.. எச்சரிக்கும் சுகாதார இயக்குநர்

  கடந்த சில வாரங்களில் பதிவான வைரஸ் காய்ச்சல்கள் , மலேரியா மற்றும் கடுமையான வயிற்றுப்போக்கு நோய்கள் (ADDs) போன்ற பருவகால பருவமழை தொடர்பான நோய்களுக்கு அசுத்தமான நீர், உணவு மற்றும் கொசுக்கள் முக்கிய காரணங்களாகும். தெலுங்கானாவில் 6,000 க்கும் மேற்பட்ட வயிற்றுப்போக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் டெங்கு வழக்குகளும் அதிகரித்து வருகின்றன.

  MORE
  GALLERIES

 • 410

  டைபாய்டை உருவாக்கும் ”பானி பூரி ” : சாலையோர சாட் உணவுகளை தவிர்க்கவும்.. எச்சரிக்கும் சுகாதார இயக்குநர்

  டைபாய்டு காய்ச்சல் என்பது சால்மோனெல்லா டைஃபி பாக்டீரியாவால், அசுத்தமான உணவு அல்லது தண்ணீரால் ஏற்படும் பாக்டீரியா தொற்று ஆகும். ஆரம்ப கட்டத்தில், டைபாய்டு அறிகுறிகளில் அதிக காய்ச்சல், வயிற்றில் கடுமையான வலி, தலைவலி, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் மற்றும் பசியின்மை ஆகியவை அடங்கும். இதற்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அறிகுறிகள் மோசமாகி சோர்வு, வெளிர் தோல், வாந்தி இரத்தம் மற்றும் உட்புற இரத்தப்போக்கு கூட ஏற்படலாம்.

  MORE
  GALLERIES

 • 510

  டைபாய்டை உருவாக்கும் ”பானி பூரி ” : சாலையோர சாட் உணவுகளை தவிர்க்கவும்.. எச்சரிக்கும் சுகாதார இயக்குநர்

  இந்தியாவில் பருவமழை தொடங்கி சில வாரங்கள் மட்டுமே ஆகும் நிலையில் டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை போன்ற தண்ணீரால் பரவும் மற்றும் உணவின் மூலம் பரவும் நோய்த்தொற்றுகள் ஏராளமாக அதிகரித்துள்ளன. அசுத்தமான உணவு அல்லது தண்ணீரில் நோயை உண்டாக்கும் பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது பிற நோய்க்கிருமிகள் உள்ளன. இவை தவிர டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களும் இக்காலத்தில் அதிகரிக்கும். இந்த நோய்களிலிருந்து உங்களைத் தடுக்க சில முக்கியமான வழிமுறைகள் உள்ளன.

  MORE
  GALLERIES

 • 610

  டைபாய்டை உருவாக்கும் ”பானி பூரி ” : சாலையோர சாட் உணவுகளை தவிர்க்கவும்.. எச்சரிக்கும் சுகாதார இயக்குநர்

  குடும்பத்தில் உள்ள அனைவரும் சுகாதாரத்தின் அடிப்படை விஷயங்களை பின்பற்ற வேண்டும். உணவு உண்ணும் முன்பும், கழிவறையைப் பயன்படுத்திய பின்பும் கைகளைக் கழுவுங்கள். வெளியில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகு, உங்கள் கைகளை தவறாமல் கழுவுவதை உறுதிப்படுத்தவும். நீங்கள் இருமல் அல்லது தும்மினால் உங்கள் வாயை மூடிக்கொள்ள வேண்டும். உங்கள் மூக்கு அல்லது கண்களைத் தொடுவதைத் தவிர்க்கவும்.

  MORE
  GALLERIES

 • 710

  டைபாய்டை உருவாக்கும் ”பானி பூரி ” : சாலையோர சாட் உணவுகளை தவிர்க்கவும்.. எச்சரிக்கும் சுகாதார இயக்குநர்

  நீங்கள் நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும். நீங்கள் பேக்கேஜ் செய்யப்பட்ட தண்ணீரைக் குடிப்பவராக இருந்தால், அது நம்பகமான பிராண்டிலிருந்து வந்ததா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வெளியில் செல்லும்போது, அந்த இடத்தில் வழங்கப்படும் தண்ணீரின் தரம் குறித்து உங்களுக்குத் தெரியாவிட்டால், பாதுகாப்பான பாட்டில் தண்ணீரை எடுத்துச்செல்லுங்கள். அசுத்தமான நீர் உங்கள் வயிற்றை எளிதில் தொந்தரவு செய்து வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும்.

  MORE
  GALLERIES

 • 810

  டைபாய்டை உருவாக்கும் ”பானி பூரி ” : சாலையோர சாட் உணவுகளை தவிர்க்கவும்.. எச்சரிக்கும் சுகாதார இயக்குநர்

  குறிப்பாக பருவமழை காலத்தில் நீங்கள் பானி பூரி மற்றும் பிற சாலையோர உணவுகளை சாப்பிட ஆசைப்படுவீர்கள், ஆனால் உங்கள் ஆரோக்கியத்திற்காக அவற்றை தவிர்ப்பது நல்லது. சுத்திகரிக்கப்படாத தண்ணீரைப் பயன்படுத்தினால், நீங்கள் அருந்து டீ கூட பாதிப்பை உண்டாக்கலாம் என்று எச்சரிக்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 910

  டைபாய்டை உருவாக்கும் ”பானி பூரி ” : சாலையோர சாட் உணவுகளை தவிர்க்கவும்.. எச்சரிக்கும் சுகாதார இயக்குநர்

  புதிய காய்கறிகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த உணவுகளை வீட்டிலேயே சமைப்பதன் மூலம் உங்கள் மழைக்கால பசியை கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்.. சமைப்பதற்கு முன் கைகளை கழுவி சுத்தமான பாத்திரங்களைப் பயன்படுத்தவும். மேலும், மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் கொட்டைகள் அதிகம் சாப்பிடுங்கள்.

  MORE
  GALLERIES

 • 1010

  டைபாய்டை உருவாக்கும் ”பானி பூரி ” : சாலையோர சாட் உணவுகளை தவிர்க்கவும்.. எச்சரிக்கும் சுகாதார இயக்குநர்

  வீட்டில், கொசுக்கள் வராமல் இருக்க, மாலையில் அனைத்து ஜன்னல்களையும் கதவுகளையும் மூடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் தூங்கும் முன் அல்லது மாலையில் வெளியே செல்லும் போது கொசு விரட்டும் கிரீம் தடவலாம். உங்கள் கால்கள் மற்றும் கைகளை மறைக்கும் ஆடைகளை அணிய முயற்சி செய்யுங்கள். உங்கள் வீட்டில் எங்கும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அது கொசுக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறும்.

  MORE
  GALLERIES