காலப்போக்கில் எவ்வளவு மணி நேரத் தூக்கம் அறிதிறன் குறைபாட்டில் கொண்டு வந்து விடுகிறது என்பதை இந்த பல்கலைக் கழகம் ஆய்வு மேற்கொண்டது. இதற்காக 70 வயதுக்கும் மேற்பட்டோர் ஆனால் 80 வயதுக்கும் குறைவான 100 பெரியோர்களை வைத்து ஆய்வு செய்தனர். இவர்களை வைத்து 4-5 ஆண்டுகள் ஆய்வு நடத்தினர். அப்போது 88 பேருக்கு மனச்சிதைவு நோய் அறிகுறிகள் இல்லை. 12 பேருக்கு அறிதிறன் குறைபாடு இருப்பது தெரிந்ததோடு ஒருவருக்கு மிதமான மனச்சிதைவு நோயும், 11 பேருக்கு மனச்சிதைவு நோய்க்கு முந்தைய அறிதிறன் குறைபாட்டுத் தன்மையும் உள்ளன.
ஆனால் இந்த பரிசோதனைகளின் பாதகம் என்னவெனில் ஒருவருக்கு ஏற்கெனவே மனச்சிதைவு, அல்ஜைமர் நோய்களுக்கான அறிகுறிகள் இல்லாமல் அவர்கள் ஆரறை மணி நேரங்களுக்கும் மேல் தூங்கினால் இந்தப் பரிசோதனை எப்படி மனச்சிதைவு நோயை கண்டுப்பிடிக்கும் என்பது தெரியவில்லை. முதலில் மனச்சிதைவு ஏற்படுவதற்கு நீண்ட தூக்கம் அல்லது தூக்கமின்மை மட்டுமே எப்படி காரணமாக இருக்க முடியும் என்பதையும் ஆய்வு விளக்கவில்லை.
மாறாக தூக்கம் என்பது பகலில் நம் உடல் உற்பத்தி செய்த தீங்கு விளைவிக்கும் புரதங்களை இரவில் தூங்கும்போது நாம் வெளியேற்றுகிறோம். அதாவது மனச்சிதைவு நோய்க்குக் காரணமாகும் புரோட்டீன்களை வெளியேற்றுகிறோம். ஒரு இரவு தூங்காவிட்டால் கூட பீட்டா அமிலாய்ட் புரோட்டீன் உற்பத்தி அதிகரித்து மூளையை பாதிக்கும் என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.