வாய்வழிப் புணர்ச்சி என்பது கலவியில் ஈடுபடும் தன்னுடைய துணையின் அந்தரங்க உறுப்புகளை வாயை பயன்படுத்தி தூண்டி விடுவதன் மூலம் அவர்களை உச்சக்கட்டம் அடைய செய்வது ஆகும். கிடைத்துள்ள அறிக்கையின் படி 18 லிருந்து 44 வயது வரை இருக்கும் 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட தம்பதிகள் தங்கள் துணையுடன் ஒரு முறையாவது வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபடுவது சாதாரண முறையில் கலவையில் ஈடுபடுவதை விட மிகவும் பாதுகாப்பானது என்றும் இதனால் கருத்தரிக்கும் வாய்ப்புகள் குறைவு எனவும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் வாய்வழி புணர்ச்சியில் ஈடுபடுவதன் மூலமும் பல்வேறு விதமான நோய் தொற்றுகள் பரவக் கூடும்
ஹெர்பெஸ் : ஹெர்பெஸ் எனும் இந்த தொற்று நோயும் ஒருவரின் சருமத்திலிருந்து மற்றொருவரின் சருமத்திற்கு பரவக்கூடிய நோயாகும். வாய்வழி புணர்ச்சியில் ஈடுபடும்போது அந்தரங்க உறுப்பின் வழியாக மற்றொருவருக்கு இந்த நோய் பரவக்கூடும். இந்த நோய் ஒருவரை தாக்கும் பட்சத்தில் வாயில் புண்கள், அரிப்பு மற்றும் வலி போன்றவை நோய் தாக்கிய இடத்தில் உண்டாகும்.
எய்ட்ஸ் : எச்ஐவி எனப்படும் வைரஸ் மூலம் உண்டாகும் எய்ட்ஸ் நோயானது ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை தாக்கி மிக கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எச்ஐவி நோய் தாக்கிய ஒருவருடன் வாய்வழிப்புணர்ச்சியில் ஈடுபடும் போது வாயில் ஏதேனும் காயங்கள் இருக்கும் பட்சத்தில் அதன் வழியாக நோய் கிருமிகள் உடலில் உள்ளே சென்று மற்றொருவருக்கும் நோய் தொற்றை உண்டாக்கும். இதனால் காய்ச்சல், மயக்கம், உடல் எடை குறைதல் போன்ற பல்வேறு அறிகுறிகள் தென்படும்.
சிபிலிஸ் : சிபிலிஸ் என்பது நாள்பட்ட பாக்டீரியா தொற்று நோயாகும். தொற்று பாதித்த ஒருவரின் அந்தரங்க உறுப்பின் மூலம் இந்த நோயானது மற்றவருக்கு பரவுகிறது. அந்தரங்க உறுப்புகளில் இருக்கும் காயங்கள் மூலம் மிக எளிதாக இவை ஆண் அல்லது பெண் என இருவருக்குமே பரவக்கூடும். மேலும் வாய்வழி புணர்ச்சியின் போது வாய் அல்லது உதட்டில் காயங்கள் இருக்கும் பட்சத்தில் இந்த நோய் மிக எளிதாக பரவக்கூடும்..
எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது? வாய்வழிப்புணர்ச்சியில் ஈடுபடும்போது ஆணுறை அணியத் தேவையில்லை என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில் வாய் வழி புணர்ச்சியின் போது ஆணுடைய அந்தரங்க உறுப்பில் ஆணுறை அணிய வேண்டியது கட்டாயம். அதே சமயம் ஒருவர் பல்வேறு நபர்களுடன் உடலுறவில் ஈடுபடும் போது பாலியல் சம்பந்தமான நோய் தொற்றுகள் உண்டாக கூடும். எனவே நீங்கள் உடலுறவில் ஈடுபடும் நபருக்கு எந்த விதமான நோய் தொற்றுகளும் இல்லை என்று உறுதியாக தெரிந்த பின் ஈடுபடுவது நல்லது.